ஜியோ ஃபைபர்-க்குப் போட்டியாக ஏர்டெல் Xstream ஸ்டிக் மற்றும் பாக்ஸ்..!

இதர ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் சந்தா செலுத்தி Xstream சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோ ஃபைபர்-க்குப் போட்டியாக ஏர்டெல் Xstream ஸ்டிக் மற்றும் பாக்ஸ்..!
ஏர்டெல் Xstream
  • News18
  • Last Updated: September 3, 2019, 11:20 AM IST
  • Share this:
ஆன்லைன் மற்றும் சாஃப்ட்வேர் மட்டுமல்லாது புதிதாக ஹார்டுவேரில் பொழுதுபோக்கு அம்சமாக Xstream ஸ்டிக் மற்றும் Xstream பாக்ஸ் வெளியீட்டுக்கு ஏர்டெல் தயாராகி உள்ளது.

புதிய Xstream ஸ்டிக் மற்றும் பாக்ஸ் சேவையை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எளிதில் பெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது ஃபோன் மூலமாகவே ஏர்டெல் Xstream ஆப் வழியாக அல்லது கம்ப்யூட்டரில் Xstream இணையதளம், டிவி-யில் Xstream ஸ்டிக் வழியாக Xstream பாக்ஸ் சேவையை இயக்க முடியும்.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள மொபைல் சேவையின் அடிப்படையிலேயே அவர்களால் Xstream பாக்ஸ் சேவையைப் பெற முடியும். சமீபத்தில்தான் ஜியோ நிறுவனம் ஜியோ ஃபைபர் சேவையை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Xstream ஸ்டிக் என்பது அனைத்து ஹெச்டி டிவி மூலமாகவும் இயக்க முடியும். ஏர்டெல் ப்ளாட்டினம் அல்லது ஏர்டெல் கோல்ட் வாடிக்கையாளர் என்றால் அனைத்து சேவைகளும் உங்களுக்குக் கிடைக்கும். இதர ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் சந்தா செலுத்தி Xstream சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து Xstream சேவைகளுடனான Xstream பாக்ஸின் விலை 3,999 ரூபாய் ஆகும்.

மேலும் பார்க்க: பேடிஎம், அமேசான் பே, ஃபோன் பே பயன்படுத்துகிறீர்களா? KYC நிரப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

₹ 72 கோடிக்கு ஆசைப்பட்டு ₹ 42 லட்சத்தை இழந்த புதுச்சேரி பி.இ பட்டதாரி
First published: September 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading