உச்ச நீதிமன்ற உத்தரவு! மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்

உச்ச நீதிமன்ற உத்தரவு! மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்
ஏர்டெல்
  • Share this:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையை செலுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு பாக்கித்தொகையை செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு 35,586 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாயை தர அவகாசம் கேட்ட வோடபோன் நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தற்போது 2,500 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை ஆயிரம் கோடி ரூபாயும் தருவதாக வோடபோன் அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்கவில்லை.


Also see:

 
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading