ஆள் சேர்த்துவிட்டால் 1,500 ரூபாய் தள்ளுபடி - ஏர்டெல் அதிரடி சலுகை!

புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் முனைப்பில் புதிய தள்ளுபடி திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது.

Web Desk | news18
Updated: November 30, 2018, 12:12 PM IST
ஆள் சேர்த்துவிட்டால் 1,500 ரூபாய் தள்ளுபடி - ஏர்டெல் அதிரடி சலுகை!
A Bharti Airtel office building is pictured in Gurugram, previously known as Gurgaon, on the outskirts of New Delhi, India April 21, 2016. REUTERS/Adnan Abidi/File Photo
Web Desk | news18
Updated: November 30, 2018, 12:12 PM IST
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் பட்டியலை அதிகப்படுத்த புதிய சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அதே திட்டத்தின் கீழ் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களை புதிய வாடிக்கையாளர்களாக இணைத்தால் போஸ்ட்பெய்ட் கட்டணத்தில் இருந்து 1,500 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. 150 ரூபாய் மதிப்புள்ள ஏர்டெல் கூப்பன்களைப் பயன்படுத்தி 10 புதிய வாடிக்கையாளர்களை ஏர்டெலுக்கு அறிமுகப்படுத்தினால் 1,500 ரூபாய் தள்ளுபடி போஸ்ட்பெய்ட் கட்டணத்தில் கிடைக்கும்.

இதேபோல் புதிதாக ஏர்டெல் வாடிக்கையாளராக இணைபவர்களுக்கு 50 ரூபாய்க்கு மூன்று தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடித் திட்டத்தைப் பெற ஆன்ட்ராய்டு அல்லது ஆப்பிள் ஃபோன் மூலம் ‘மை ஏர்டெல் ஆப்’ பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அந்த ஆப் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து தள்ளுபடி சலுகையை பெறலாம்.

மேலும் பார்க்க: காமெடி மன்னர்கள் கவுண்டமணி - செந்தில்
First published: November 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...