• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு... இனி இதுதான் பிளான்..

ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு... இனி இதுதான் பிளான்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அன் லிமிட்டெட் காலுடன் டேட்டாவை குறைவாக உபயோகிப்போர், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 379 ப்ளானை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ப்ளான் இனி, ரூ. 455 ஆக உயர்கிறது.

  • Share this:

    ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணம் வரும் 26-ம்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, அன்பான வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேசிக் ப்ளான் ரூ. 79-ல் இருந்து ரூ. 99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ப்ளானான ரூ. 149, நவம்பர் 26-க்குப் பின்னர் ரூ. 179 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானை, டேட்டாவை மிக மிக குறைவாக உபயோகிப்போர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்கீழ் அன் லிமிட்டெட் கால்களை பேசிக் கொள்ள முடியும்.

    நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி, 28 நாட்கள் வேலிடிட்டி தரும் ரூ. 249 ப்ளான், இனி ரூ. 299-ஆக உயரவுள்ளது. இதே ப்ளானில், நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. தரும் வெர்ஷன், ரூ. 298-ல் இருந்து, ரூ. 359 ஆக உயர்கிறது.

    அன் லிமிட்டெட் காலுடன் டேட்டாவை குறைவாக உபயோகிப்போர், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 379 ப்ளானை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது இனி, ரூ. 455 ஆக உயர்கிறது.

    தினசரி டேட்டா உபயோகிப்பவர்கள் லாப அடிப்படையில் ரூ. 598 ப்ளானை பயன்படுத்துகின்றனர். இதில் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த ப்ளான் இனி ரூ. 719 ஆக உயரப்போகிறது. இதே ப்ளானில் நாள் ஒன்று 2 ஜிபி டேட்டா வெர்ஷன், ரூ. 698-ல் இருந்து ரூ. 839 ஆக உயர்கிறது.

    மற்ற ப்ளான்களைப் போன்று, வருடாந்திர ப்ளான்களிலும் ஏர்டெல் தனது கட்டணத்தை உயர்த்துகிறது. அதன் முழு விபர பட்டியல் இதோ...



































































































    தற்போதைய கட்டணம் வேலிடிட்டி புதிய கட்டணம் ப்ளான் விவரம்
    ரூ. 79 28 days  ரூ. 99 50% கூடுதல் டாக் டைம், 200MB data 1p/sec கால் tariff
    ரூ. 149 28 days  ரூ. 179 Unlimited calling, 100 SMS/day, 2 GB data
    ரூ. 219 28 days  ரூ. 265 Unlimited calling, 100 SMS/day, 1 GB/day data
    ரூ. 249 28 days  ரூ. 299 Unlimited calling, 100 SMS/day, 1.5 GB/day data
    ரூ. 298 28 days  ரூ. 359 Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data
    ரூ. 399 56 days  ரூ. 479 Unlimited calling, 100 SMS/day, 1.5 GB/day data
     ரூ.449 56 days  ரூ. 549 Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data
     ரூ.379 84 days  ரூ. 455 Unlimited calling, 100 SMS/day, 6 GB data
     ரூ.598 84 days  ரூ. 719 Unlimited calling, 100 SMS/day, 1.5 GB/day data
     ரூ. 698 84 days  ரூ. 839 Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data
     ரூ. 1498 365 days  ரூ. 1799 Unlimited calling, 100 SMS/day, 24 GB data
     ரூ. 2498 365 days  ரூ. 2999 Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data
     ரூ. 48 Unlimited  ரூ. 58 3 GB data
     ரூ. 98 Unlimited  ரூ. 118 12 GB data
     ரூ. 251 Unlimited  ரூ. 301 50 GB data



    மேலும் செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: