இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டேல் கடந்த மே மாதத்தில் 46 லட்சம் பயனாளர்களை இழந்துள்ளது. அதேவேளையில், ஜியோ நிறுவனம் புதிதாக 35 லட்சம் பயனாளர்களை பெற்றுள்ளது.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மே மாதத்தில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் அதிக பயனாளர்களை இழந்துள்ளன. பார்தி ஏர்டெல் நிறுவனம் 46.13 லட்சம் பயனாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அதன் மொத்த பயனாளர்களின் எண்ணிக்கை 34.8 கோடியாக குறைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வோடஃபோன் - ஐடியா நிறுவனம் 42.80 லட்சம் பயனாளர்களை இழந்துள்ளது. இதனால் அதன் மொத்த பயனாளர்கள் எண்ணிக்கை 27.7 கோடியாக குறைந்துள்ளது. அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8 லட்சத்து 80 ஆயிரம் பயனாளர்களை இழந்துள்ளது.
இதையும் படிங்க: மொபைல் தொலைந்து விட்டதா.. UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி?
ஒட்டுமொத்தமாக, கடந்த மே மாதத்தில் இந்திய மொபைல் சந்தை 62.70 லட்சம் பயனாளர்களை இழந்துள்ளது. தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சொன்றுவிட்டதால், சிம்கார்டுகளை டி-ஆக்டிவேட் செய்துள்ளனர். பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அதேவேளையில், ஜியோ நிறுவனம் 35.50 லட்சம் புதிய பயனாளர்களை பெற்றுள்ளது. இதன்மூலம் அதன் மொத்த பயனாளர்களின் எண்ணிக்கை 43 கோடியே 12 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 117.6 கோடியாக உள்ளது.
மேலும் படிக்க: புதுப்படங்கள் பார்க்க Amazon Prime-க்கான இலவச சந்தாவை பெறுவது எப்படி? சிம்பிள் வழிகள் இதோ!
வயர்லெஸ் பிராட்பேண்ட் பயனாளர்களைப் பொறுத்தவரை, ஜியோ 43.10 கோடி பயனாளர்களையும் எர்டேல் நிறுவனம் 18 கோடி பயனாளர்களையும் வோடாஃபோன் 11 கோடி பயனாளர்களையும் கொண்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.