HOME»NEWS»TECHNOLOGY»airtel launches data add on plans at rs 78 and rs 248 check all offers vin ghta
ஏர்டெல் வெளியிட்டுள்ள புதிய "Data add-on plans": ரூ.78-ல் ஆரம்பமாகும் டேட்டா பேக் விவரங்கள்!
ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான இலவச ட்ரையலையும் பெறலாம். ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் மூலம் ரீசார்ஜ் செய்தால், அதாவது ரூ.200-க்கு மேல் விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் தங்கள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஏர்டெல் ஆட்-ஆன் டேட்டா கூப்பன்களையும் வழங்குகிறது.
ப்ரீபெய்டு (Airtel PrePaid) வடிக்கையாளர்களுக்காக ஆட்-ஆன் பிளான்களின் (add-on Plans) பட்டியலை ஏர்டெல் நிறுவனம் நீட்டித்துள்ளது. இப்போது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks app) அதன் பயனர்களுக்கு, ரூ. 78, ரூ. 89, ரூ.131 மற்றும் ரூ. 248 ஆகிய விலையில் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களைக் வழங்குகிறது. ஏற்கனவே ரூ.48, ரூ. 98, ரூ. 251 மற்றும் ரூ .401 விலையுள்ள திட்டங்கள் தேங்க்ஸ் செயலியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ரூ.78 மற்றும் ரூ. 248 விலையில் வரும் ஏர்டெல் டேட்டா ஆட்-ஆன் பேக் தொகுக்கப்பட்ட விங்க் பிரீமியம் (Wynk Premiem) சந்தாவுடன் வருகிறது.
மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆட்-ஆன் திட்டங்களை சப்ஸ்கிரைப் செய்வதற்கு முன்னதாக பயனர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஏதேனும் ஒன்றை சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. ஏனெனில், இவை முழுமையான திட்டங்களாக செயல்படாது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ. 48 மற்றும் ரூ.401 திட்டங்கள் மட்டுமே முழு திட்டங்களாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.78 மற்றும் ரூ.248 ப்ரீபெய்ட் திட்டங்கள் முறையே 5 ஜிபி மற்றும் 25 ஜிபி ஆகியவற்றை வழங்குகின்றன.
மேலும் ஏற்கனவே சப்ஸ்கிரைப் செய்து வைத்துள்ள பிளான்கள் செல்லுபடியாகும் வரை இந்த புதிய ஆட்-ஆன் பிளான்ஸ் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டங்கள் விளம்பரமில்லாத இசை மற்றும் வரம்பற்ற பாடல் பதிவிறக்கங்களை வழங்கும் விங்க் மியூசிக் பிரீமியம் சந்தாவை வழங்குகின்றன. அதாவது, ரூ.78 ப்ரீபெய்ட் பேக் ஒரு மாத விங்க் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. அதேபோல, ரூ. 248 ப்ரீபெய்ட் பேக் ஒரு வருட விங்க் பிரீமியம் சந்தாவுடன் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் இருந்து நேரடியாக டிஜிட்டல் கடையில் விங்க் பிரீமியம் சந்தாக்களை தனித்தனியாக வாங்கவும் ஏர்டெல் உங்களை அனுமதிக்கிறது.
அதேபோல ரூ. 89 ப்ரீபெய்ட் பிளான் சமீபத்தில் ஏர்டெல் அமேசானுடன் கூட்டு சேர்ந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 6 ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் ஏற்கனவே இருக்கும் உங்கள் ப்ரீபெய்ட் பேக் அடிப்படையில் இதன் செல்லுபடியாகும் காலம் இருக்கும். இதற்கடுத்ததாக ரூ. 131 விலை ஆட்-ஆன் பேக், அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கு 30 நாட்கள் சந்தாவுடன் 100 எம்பி தரவை வழங்குகிறது. ரூ.401 ஆட் ஆன் பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும் 30 ஜிபி தரவை வழங்குகிறது. மேலும் இது டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கும் ஒரு மாத சந்தாவை வழங்குகிறது.
இதுதவிர ரூ. 98 ஆட்-ஆன் பேக், ஏற்கனவே உள்ள பேக்குகளின் தற்போதைய செல்லுபடியாகும் காலம் வரை 12 ஜிபி தரவை வழங்குகிறது. அதேபோல, ஏர்டெல் அதன் பயனர்களுக்கு ஏர்டெல் டிஜிட்டல் ஸ்டோருக்குள் விங்க் மியூசிக் அணுகலை வழங்குகிறது. இது முறையே ரூ.9 மற்றும் ரூ .299 விலையுள்ள திட்டங்களின் அடிப்படையில் பயனர்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர சந்தாவை வழங்குகிறது.
ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான இலவச ட்ரையலையும் பெறலாம். ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் மூலம் ரீசார்ஜ் செய்தால், அதாவது ரூ.200-க்கு மேல் விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் தங்கள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஏர்டெல் ஆட்-ஆன் டேட்டா கூப்பன்களையும் வழங்குகிறது. அதில் ஏர்டெல் 28 நாள் செல்லுபடியாகும் திட்டங்களுடன் 2 ஜிபி கூடுதல் டேட்டாவையும், 56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களுடன் 4 ஜிபி கூடுதல் டேட்டாவையும், 84 நாட்கள் செல்லுபடியை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 6 ஜிபி கூடுதல் டேட்டாவையும் பெறலாம்.