ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பெங்களூரு இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டில் 5G பிளஸ் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய ஏர்டெல்.!

பெங்களூரு இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டில் 5G பிளஸ் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய ஏர்டெல்.!

ஏர்டெல் 5G

ஏர்டெல் 5G

Airtel 5G | பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் 5G செல் சைட்ஸ்களை பயன்படுத்தியுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore, India

நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக 5G சர்விஸ் தொடங்கப்பட்டு வரும் நிலையில், Airtel 5G Plus சேவையானது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட 8 நகரங்களில் கடந்த மாதம்  அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினலில் 5G செல் சைட்ஸ்களை பயன்படுத்தியுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 5G சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் பரபரப்பான விமான நிலையமாக இருக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் முறையான திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள டெர்மினல் 2-ல் 5G பிளஸ் சேவையை வழங்குவதாக ஏர்டெல் அறிவித்து உள்ளது.

இதன் மூலம் வருகை மற்றும் புறப்பாடு டெர்மினல்கள், ஓய்வறைகள், போர்டிங் கேட்ஸ், மைகிரேஷன் & இமிகிரேஷன் பகுதிகள், செக்யூரிட்டி கேட்ஸ், பேக்கேஜ் க்ளெய்ம் பெல்ட் பகுதிகளில் நேரத்தை செலவழிக்கும் மொபைல் ஃபோன் யூஸர்கள் இப்போது மின்னல் வேக நெட் ஸ்பீடை பெறலாம். மேலும் அல்ட்ரா ஃபாஸ்ட் 5G நெட்வொர்க்கிற்கான அணுகலை பெற்ற நாட்டின் முதல் விமான நிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் இருக்கிறது என்று ஏர்டெல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

5G ஸ்மார்ட் ஃபோன்களை கொண்ட அனைத்து ஏர்டெல் யூஸர்களும் தற்போதுள்ள டேட்டா பிளான்களை பயன்படுத்தியே அல்ட்ரா ஃபாஸ்ட் ஏர்டெல் 5G பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும். தற்போதுள்ள ஏர்டெல் 4G சிம்மிலேயே 5G-யை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் என்பதால் 5G சேவையை பெறுவதற்காக சிம்மை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஏர்டெல் நிறுவன உயரதிகாரியான ரந்தீப் செகோன் கூறுகையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் நவீன விமான நிலையத்தோடு இனி அதிநவீன Airtel 5G Plus சர்விஸை பயன்படுத்தி மகிழ்வார்கள். டெர்மினல் 2- ல் இருக்கும் போது ஏர்டெல் யூஸர்கள் HD வீடியோவை தடையின்றி ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கலாம், கேமிங், மல்டிபிள் சேட் மற்றும் ஃபோட்டோ, வீடியோ அல்லது பிற விஷயங்களை அதிவேகமாக அப்லோடிங் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

Also Read : சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வைத்த செக்... இன்னும் 3 மாசம் தான் கெடு.!

டெல்லி ஏர்போர்ட்டில் எப்போது.?

முன்னதாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் 5G சர்விஸ் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனவே டெல்லி தான் 5G நெட்வொர்க்கிற்கான அணுகலை பெற்ற நாட்டின் முதல் விமான நிலையத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பெங்களூரு ஏர்போர்ட் முந்தி கொண்டுள்ளது.

இதனிடையே டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், டெர்மினல் 3 பயணிகள் விமான நிலையத்தில் இருக்கும் Wi-Fi அமைப்பை விட 20 மடங்கு வேகமான டேட்டா வேகத்துடன் கூடிய 5G நெட்வொர்க்கை அனுபவிக்க முடியும் என குறிப்பிட்டிருக்கிறது. எனவே வெகுவிரைவில் டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் ஏர்டெல் 5G பிளஸ் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Airport, Airtel, Bengaluru, Tamil News