• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Airtel, Vi, Jio வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அட்டகாசமான சலுகைகள்!

Airtel, Vi, Jio வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அட்டகாசமான சலுகைகள்!

ஏர்டெல்

ஏர்டெல்

பிரீப்பெய்ட் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கூடுதல் சலுகைகளை அளிக்கும் திட்டங்களை தேர்தெடுப்பது வழக்கம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய ஆஃபர்களையும், சலுகைகளையும் வழங்கி வரும் நிலையில், ரூ.249 ரீச்சார்ஜ் திட்டத்தில் ஏர்டெல், ஜியோ, Vi வழங்கும் சலுகைகளை என்ன என்பதை பார்க்கலாம்.

பிரீப்பெய்ட் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கூடுதல் சலுகைகளை அளிக்கும் திட்டங்களை தேர்தெடுப்பது வழக்கம். அந்தவகையில் 28 நாட்கள் வேலிடிட்டி உள்ள திட்டங்களில் ஏர்டெல், ஜியோ, Vi ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. ஜியோ நிறுவனம் ரூ.249 திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால், ஏர்டெல் மற்றும் Vi ஆகியவை நாள்ளொன்றுக்கு 1.5 ஜி.பி டேட்டாவை வழங்குகின்றன.

 ஜியோ ரூ.249 prepaid திட்டம்:  

28 நாட்கள் வேலிடிட்டி உடைய ஜியோவின் ரூ.249 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மாதம் 56 ஜிபி டேட்டாவைக் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் Jio to Jio மற்றும் மற்ற மொபைல் எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளை கொடுக்கிறது.1000 நிமிட FUP வரம்புடன் குரல் அழைப்புகளையும் (Voice call) கொடுக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசமாக வழங்குவதுடன் ஜியோ செயலிகளை கூடுதலாக பயன்படுத்துவும் அனுமதி வழங்குகிறது.

Vi ரூ.249 Prepaid திட்டம்:

Vi இன் இந்த 28 நாட்கள் ப்ரீபெய்டு திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. மேலும், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்களை இலவசமாக அனுப்பலாம். சில கூடுதலான சலுகைகளுடன் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்களை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ .249 ப்ரீபெய்டு திட்டம்:  

ஏர்டெல் ரூ .249 ப்ரீபெய்டு திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகளும், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்களையும் அனுப்பலாம். 28 நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும்.

அதிகபட்ச டேட்டா தேவைப்படுவோர் ஜியோவின் ரூ.249 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெறலாம். ஏர்டெல் மற்றும்  Vi நிறுவனங்களின் ரூ.249 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே பெறமுடியும்.  ஜியோ FUP (Fair Usage Policy) வரம்பைக்கொண்டுள்ளது. அதாவது ஜியோவில் இருந்து மற்ற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 1000 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என்ற வரம்பைக் கொண்டுள்ளது.  

Vi மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அன்லிமிட்டெட் அழைப்புகளைக் கொடுக்கின்றன. ரோல்ஓவர் திட்டத்தில் Vi 5 ஜிபி டேட்டாவுடன் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், ஏர்டெல் மற்றும்  Vi ஆகியவை ரூ.298 மற்றும் ரூ.299 திட்டங்களைக் கொண்டுள்ளன, அவை 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் கூடுதல் நன்மைகளை கொடுப்பதால் இதனையும் வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ளலாம்.

Also read... Whatsapp Features | 2020-ஆம் ஆண்டில் வாட்ஸ்-அப் அறிமுகம் செய்த 5 முக்கிய அம்சங்கள்..

ஏர்டெல் ரூ .298 prepaid திட்டம்:

இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை அன்லிமிட்டெட் அழைப்புகளை கொடுக்கிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். இந்த திட்டத்தில் Airtel XStream subscription மற்றும் இலவச ஆன்லைன் படிப்புகள், விங்க் இசை, ரூ.150 Fastag cashbag ஆகியவை கூடுதலாக கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்த திட்டம் பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டையும் பெற்றுக்கொள்ளலாம். ஏர்டெல் Thanks app -ல் ரீச்சார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு 50 ரூபாய் cashbag மற்றும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதனால், 248 ரூபாய்க்கு கூடுதலாக 2 ஜிபியுடன் இந்த திட்டம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

Vi வோடாஃபோன் ரூ.299 Prepaid திட்டம்:

இது இரட்டை தரவு Prepaid திட்டமாகும். அதன்படி, வார நாட்களில் 2 ஜிபி டேட்டா பயன்படுத்துவோர், வார இறுதி நாட்களில் 2 +2 என்ற அடிப்படையில் 4 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, வார நாட்களில் குறைவான டேட்டாக்களை பயன்படுத்தி அந்த டேட்டாக்களை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் ஆன்லைன் லைவ் வீடியோக்களை எவ்வித தடையுமின்றி கண்டுகளிக்கலாம். நாள்ளொன்றுக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்குவதுடன், அன்லிமிட்டெட் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். மேலும், எம்.பி.எல்(MPL) செயலில் தங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாடுவதற்கு கூடுதலாக 125 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரையும் (Cashbag offer) வழங்குகிறது. ஜொமோட்டோவில் (Zomato) உணவு ஆர்டர் மற்றும் Vi Movies, Tv-க்களை பார்க்க 75 ரூபாய் நாள்தோறும் டிஸ்கவுண்ட் (Discount) வழங்கப்படும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: