HOME»NEWS»TECHNOLOGY»airtel jio and vi prepaid plan comes with 28 days validity check benefits vin ghta
Jio, Airtel, Vi நிறுவனங்களின் பெஸ்ட் ப்ரீபெய்டு 2GB பிளான் குறித்த முழு விவரம்!
வோடபோன் வழங்கும் ரூ.595 ப்ரீபெய்டு திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நாள்ளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். மேலும், ZEE5 பிரீமியம் கூடுதலாக கொடுக்கப்படுகிறது.
ஜியோ, ஏர்டெல், Vi நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதால் எதனை தேர்தெடுப்பது என வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பெரும்பாலானோர் சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காக, ஜியோ, ஏர்டெல், Vi நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்டு 2 ஜிபி திட்டங்கள் இங்கு விலைப்பட்டியலுடன் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஜியோ ரூ.249 திட்டம்:
ஜியோவின் 249 ரூபாய் திட்டம் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் Jio to Jio மற்றும் மற்ற மொபைல் எண்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளை கொடுக்கிறது.1000 நிமிட FUP வரம்புடன் குரல் அழைப்புகளையும் (Voice call) கொடுக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசமாக வழங்குவதுடன் ஜியோ செயலிகளை கூடுதலாக பயன்படுத்துவும் அனுமதி வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியாகும்.
ஏர்டெல் ரூ.298 திட்டம்:
இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை அன்லிமிட்டெட் அழைப்புகளை கொடுக்கிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். இந்த திட்டத்தில் Airtel XStream subscription மற்றும் இலவச ஆன்லைன் படிப்புகள், விங்க் இசை (Wynk Music) கூடுதலாக கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்த திட்டத்தின் மூலம் விதிமுறைகளின்படி பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டையும் பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.449 திட்டம்:
ஏர்டெல்லில் இருக்கும் 449 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 56 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வரை அனுப்பலாம். மேலும், 400+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், அன்லிமிடெட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்துகொள்ளலாம். Airtel XStream சந்தா, விங்க் மியூசிக் மற்றும் அன்லிமிடெட் இசை பதிவிறக்கங்களுடன் இலவச ஹலோடியூன்ஸ் சலுகையையும் பெற்றுக்கொள்ளலாம்
வோடபோன் வழங்கும் ரூ.595 ப்ரீபெய்டு திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நாள்ளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். மேலும், ZEE5 பிரீமியம் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். Vi செயலியில் உள்ள திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.