Airtel, Jio, Vi 3GB daily data : குறைவான விலையில் கிடைக்கும் தினசரி 3 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள்!

ரிலையன்ஸ் ஜியோ

ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒடிடி தளங்களில் நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்வதற்கும், வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யவும் அதிக டேட்டாவை தேடும் யூசர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடு முழுவதையும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலுக்கி வருவதால் பெரும்பாலான மக்கள் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்து வருகிறார்கள். சிலர் அலுவலக பணிகளுக்காக பிராட்பேண்ட் கனக்ஷன்களை எடுத்திருந்தாலும், அவற்றின் மாதாந்திர பில் ஆயிரக்கணக்கில் இருப்பதால் பலர் தங்களது மொபைல் மூலம் கிடைக்கும் தினசரி டேட்டா பிளான்களை பயன்படுத்தி வேலை செய்து வருகின்றனர்.

தொற்றுக்கு மத்தியில் மக்களின் இந்த அத்தியாவசிய தேவையைப் புரிந்து கொண்டுள்ள பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மலிவான விலயில் அதிக டேட்டா தரும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க போட்டி போட்டு வருகின்றன. ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ(Vi) உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒடிடி தளங்களில் நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்வதற்கும், வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யவும் அதிக டேட்டாவை தேடும் யூசர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பின்வரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் 28 நாட்களுக்கு செல்லும் மற்றும் விலையும் ரூ .500-க்கு கீழ் இருக்கும். சமீபத்தில் Vi தினசரி 3 ஜிபி அளவிலான டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் நன்மைகளை வழங்குகிறது. ஸ்ட்ரீமிங் விருப்பங்கள் இன்றி டேட்டா, கால் சலுகைகள் மட்டுமே போதும் என நினைக்கும் யூசர்கள் ஜியோ வழங்கும் ரூ.349 மற்றும் ஏர்டெல் வழங்கும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு செல்லலாம். இந்த திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.349 ஜியோ ப்ரீபெய்ட் பிளான்:

ஜியோவின் இந்த பிளான் யூசர்களுக்கு 28 நாள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் ஆன்-நெட் கால் சலுகைகள் மற்றும் அன்லிமிடெட் உள்நாட்டு அழைப்புகளுடன் வருகிறது. பேக் ஜியோ பயன்பாடுகளுக்கு ஒரு பாராட்டு சந்தாவையும் வழங்குகிறது. மேலும் இந்த பேக் ஜியோ apps-களுக்கான சந்தாவையும் வழங்குகிறது.

ரூ.398 ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான்:

28 நாட்கள் வேலிடிட்டி உடைய ஏர்டெல்லின் இந்த பிளான் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் அளிக்கப்படும் தரப்படும் சலுகைகளில் விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமியின் சந்தாக்களுடன் கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் சந்தாவும் அடங்கும். வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் FASTagபரிவர்த்தனைகளில் ரூ.150 கேஷ்பேக் கிடைக்கும். இந்த திட்டத்துடன் ஸ்ட்ரீமிங் நன்மைகள் எதுவும் இணைக்கப்படவில்லை.

ரூ.401 Vi ப்ரீபெய்ட் பிளான்:

Vi வழங்கும் இந்த ப்ரீபெய்ட் பிளான் 28 நாட்களுக்கு 3 ஜிபி தினசரி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும் இது 16 ஜிபி கூடுதல் டேட்டாவையும், டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு 1 ஆண்டு விஐபி சந்தாவையும் வழங்குகிறது. இது அதிவேக இரவுநேர இன்டர்நெட், வீக் எண்ட் ரோல்ஓவர் டேட்டா நன்மைகள் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

Also read... WFHல் பணிபுரிபவர்களுக்கு வசதியாக 40Mbps, 50Mbps மற்றும் 100Mbps வேகம் கொண்ட சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்!

ரூ.401 ஜியோ ப்ரீபெய்ட் பிளான்:

ஜியோவின் இந்த பிளான் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் 6 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் உள்நாட்டு கால்களுடன் யூசர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ apps-களுக்கு சந்தாவையும், டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு 1 ஆண்டு விஐபி சந்தாவையும் வழங்குகிறது.

ரூ 405 Vi ப்ரீபெய்ட் பிளான்:

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் தினசரி 3 ஜிபி டேட்டா, கூடுதல் 6 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்-களை யூசர்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்த பிளான் ZEE5 பிரீமியத்திற்கு 1 வருட அணுகலையும், Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலையும் வழங்குகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் 3 ஜிபி தினசரி டேட்டாவுடன், 56 நாட்கள் மற்றும் 94 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய பிளான்களையும் வழங்குகின்றன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: