Home /News /technology /

வாடிக்கையாளர்களை 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்குமாறு அறிவுறுத்தி வரும் ஏர்டெல்.!

வாடிக்கையாளர்களை 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்குமாறு அறிவுறுத்தி வரும் ஏர்டெல்.!

ஏர்டெல்

ஏர்டெல்

Airtel 5G services | 4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவையானது மிக பெரிய அளவில் அதிவேக இணைய சேவையை கொண்டிருக்கும். சுருக்கமாக சொன்னால் 4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவை 100 மடங்கு வேகமானதாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் பங்கேற்று 5ஜி ஏலம் எடுத்திருந்தன. தொலைத்தொடர்பு துறையின் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் அறிமுகம் ஆகவுள்ள இந்த 5ஜி சேவைகள் என்பது மிக அதிவேகமான இண்டர்நெட் வசதி மற்றும் துல்லியமான வாய்ஸ் காலிங் உள்ளிட்ட சேவைகளை வழங்க உள்ளது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், இந்தியாவில் தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கையில் இருப்பது 4ஜி சேவை கொண்ட ஃபோன்கள் மட்டுமே. 5ஜி வசதி கொண்ட ஃபோன்கள் இப்போதுதான் சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பான 5ஜி சேவையை பெற்றிடும் வகையில் 5ஜி ஃபோன்களை வாங்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி கோபால் விட்டல், தமது வாடிக்கையாளர்களுக்கு பொது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பயன்படுத்தி, தாங்கள் சார்ந்த பகுதியில் 5ஜி சேவை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.



தீபாவளி முதல் 5ஜி சேவை:

முன்னதாக, தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் மாதத்திற்குள் நாட்டின் பல பகுதிகளில் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஏர்டெல் நிறுவனத்திற்கு மிக பெரிய போட்டியாளராகக் கருதப்படும் ரிலையன்ஸ் ஜியோ சார்பிலும் இதே காலகட்டத்தில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

Also Read : இந்தியாவில் 5ஜி சேவைகளின் விலை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் - காரணம் தெரியுமா.?

அன்புள்ள வாடிக்கையாளரே!!

வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் கோபால் விட்டல் எழுதியுள்ள கடிதத்தில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் 5ஜி சேவையை நாங்கள் தொடங்க இருக்கிறோம். டிசம்பர் மாதத்திற்குள் மிக முக்கிய மெட்ரோ நிறுவனங்களில் சேவை கிடைக்கும். அதற்கு பிறகு, நாடெங்கிலும் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் நகர்ப்புற பகுதிகள் அனைத்திற்கும் சேவையை கொண்டு சேர்ப்போம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



மேலும், “4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவையானது மிக பெரிய அளவில் அதிவேக இணைய சேவையை கொண்டிருக்கும். சுருக்கமாக சொன்னால் 4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவை 100 மடங்கு வேகமானதாக இருக்கும்.

Also Read : உங்களிடம் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவைகள் பயன்படுத்த முடியுமா?

லோ பேண்ட் 5ஜி சேவை என்பது 50 முதல் 250 எம்பிபிஎஸ் வேகத்திலும், நடுத்தர 5ஜி சேவை என்பது 100 முதல் 900 எம்பிபிஎஸ் வேகத்திலும், அதிவேக பேண்ட் என்பது அதிகபட்சம் 1.8 ஜிபிஎஸ் வரையிலும் இருக்கும்’’ என்று விட்டல் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Airtel, India

அடுத்த செய்தி