ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இலவசமாக 1GB டேட்டாவை வழங்கும் ஏர்டெல் - உங்களுக்கு இந்த ஆஃபர் இருக்கா என்று எப்படி தெரிந்து கொள்வது.?

இலவசமாக 1GB டேட்டாவை வழங்கும் ஏர்டெல் - உங்களுக்கு இந்த ஆஃபர் இருக்கா என்று எப்படி தெரிந்து கொள்வது.?

ஏர்டெல்

ஏர்டெல்

Airtel Offer } குறைந்த மதிப்புள்ள பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் யூஸர்கள் இந்த கூடுதல் 1GB டேட்டா நன்மைகளைப் பெறுகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஏர்டெல் நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்ட தனது சில யூஸர்களுக்கு இலவச டேட்டாவை வழங்க துவங்கி இருக்கிறது. ஆம், ஏர்டெல் சில யூஸர்களுக்கு 1GB ஹை-ஸ்பீட் இன்டர்நெட் டேட்டாவை அளிக்க தொடங்கியுள்ளது.

இந்நடவடிக்கை அதிக வாடிக்கையாளர்களை கவருவதற்காக இருக்கலாம் என்றாலும் ஸ்மார்ட் பிளான்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. ஏர்டெல் நிறுவனம் 1GB ஹை-ஸ்பீட் டேட்டாவை, டேட்டா வவுச்சர் வடிவில் இலவசமாக கிரெடிட் செய்துள்ளதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு SMS அனுப்புகிறது. நீங்கள் இந்த ஆஃபரை பெற்றிருந்தால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆப்-ன் மூலம் நீங்கள் அதை க்ளைம் செய்ய முடியும். 1GB டேட்டா கிரெடிட் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறப்படுகிறது.

அறிக்கைகளின் படி, குறைந்த மதிப்புள்ள பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் யூஸர்கள் இந்த கூடுதல் 1GB டேட்டா நன்மைகளைப் பெறுகின்றனர். இதில் ரூ.48 மற்றும் ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் முறையே 3GB மற்றும் 100MB டேட்டா நன்மைகளுடன் வருகின்றன. இருப்பினும் ஏர்டெல் இந்த 2 பிளான்களுடனும் 1GB கூடுதல் டேட்டாவை வழங்கியுள்ளது. நீங்கள் இதை பெற தகுதியானவர் என்றால் உங்களது Airtel Thanks ஆப்-ல் உள்ள Coupons section-ல் இலவச 1GB டேட்டாவிற்கான வவுச்சர் சேர்க்கப்பட்டிருக்கும்.

Also Read ; Google அசிஸ்டண்ட்டில் வரவுள்ள புதிய அப்டேட் என்ன தெரியுமா.?

நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், நீங்கள் இதை பெற்றிருக்கலாம். தகுதியான வாடிக்கையாளர்கள் வவுச்சரை வெற்றிகரமாக க்ளைம் செய்தால் 15 நிமிடங்களுக்குள் டேட்டா வவுச்சரை பெறுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மேலும் ஏர்டெல் இப்படி இலவசமாக டேட்டா வழங்குவது முதல் முறையல்ல. நிறுவனம் இதற்கு முன் 2GB இலவச டேட்டா என்ற விளம்பர சலுகையை வழங்கியது.

புதிய பிராட்பேண்ட் பிளான்கள்

இதனிடையே ஏர்டெல் 3 புதிய பிராட்பேண்ட் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்-ன் சமீபத்திய ரூ.1,599 பிராட்பேண்ட் திட்டம் ஏர்டெல் 4K Xstream Box உடன் 350 சேனல்களுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. இந்த பாக்ஸுக்கு ஒருவர் ரூ.2,000 செலுத்த வேண்டும், இது ஒரு முறை கட்டணம். இந்த செட்டப் பாக்ஸ் மூலம், யூசர்கள் கேபிள் டிவி மற்றும் OTT கன்டென்டை பார்க்க முடியும். இந்த பிளானில் 300Mbps இன்டர்நெட் ஸ்பீட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான 14 OTT பிளாட்ஃபார்ம்களுக்கான இலவச அணுகலும் அடங்கும். இந்த பிராட்பேண்ட் பிளானில் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 3.3TB டேட்டாவை பெறுவார்கள்.

3.3TB மாதாந்திர FUP டேட்டாவுடன் 200Mbps ஸ்பீட் கொண்ட ரூ.1099 பிராட்பேண்ட் பிளானும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பிளானின் OTT நன்மைகள் ரூ.1599 ஏர்டெல் பிராட்பேண்ட் பிளானை போன்றது தான். ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால் இதில் Netflix-க்கான அக்சஸ் கிடையாது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஆஃபரும் இதில் உண்டு மற்றும் வாடிக்கையாளர்கள் 350+ டிவி சேனல்களை பெறுவார்கள்.

மூன்றாவதாக ரூ.699 ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டமானது 40Mbps வேகம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவை தவிர சில பிரபலமான OTT பிளாட்ஃபார்ம்களுடன் வருகிறது. இலவச டிவி சேனல் ஆஃபரும் இதில் உண்டு. இதனிடையே இந்த புதிய பிளான்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீர் இந்தர் நாத் கூறி உள்ளார்.

First published:

Tags: Airtel