சோதனையில் வெற்றி… விரைவில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த இருக்கும் ஏர்டெல் நிறுவனம்!

5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த இருக்கும் ஏர்டெல்

இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் சோதனை முயற்சிகளை வெற்றிகரமாக முடித்த முதல் நிறுவனமாக ஏர்டெல் உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  • Share this:
பாரதி ஏர்டெல் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை விரைவில் வழங்க தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி சோதனையை ஐதராபாத் நகரில் வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சோதனை வர்த்தக நெட்வொர்க்கில் நடத்தப்பட்ட நிலையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் சோதனை முயற்சிகளை வெற்றிகரமாக முடித்த முதல் நிறுவனமாக ஏர்டெல் உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வெற்றிகர சோதனையை தொடர்ந்து நாடு முழுக்க விரைவில் 5ஜி சேவையை வழங்க ஏர்டெல் தயாராகி வருகிறது. இதற்கென ஏர்டெல் நிறுவனம் Sub-6GHz NSA நெட்வொர்க் தளத்தை 1800MHz பேண்ட் பயன்படுத்தி இருக்கிறது. இதன் உபகரணம் 1800/2100/2300MHz மற்றும் sub-GHz பேண்ட்களான 800/900 MHz உள்ளிட்டவைகளுடன் இயங்கும் திறன் கொண்டது. ஆற்றல் மிக்க ஸ்பெக்ட்ரம் ஷேரிங் தொழில்நுட்பம் கொண்டு ஏர்டெல் நிறுவனம் ஒரே ஸ்பெக்ட்ரமில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்களை இயக்க இருக்கிறது. அதன்படி 5 ஜி மற்றும் 4 ஜி சேவைகளை ஒரே ஸ்பெக்ட்ரம் தொகுதிக்குள் வழங்க அனுமதிக்கும்.

பாரதி ஏர்டெல்


இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் ஏர்டெல் 5ஜி சேவைகளை துவங்க இருப்பதால் யூசர்கள் தங்கள் தொலைபேசிகளில் 5 ஜி சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பல ஆண்டுகளாக தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒரு சவாலாக உள்ளது, மேலும் இதனை ஏலம் எடுத்து வாங்குவதற்கு விலை அதிகம. இதனால் வரவிருக்கும் மாதங்களில் தற்போதுள்ள நெட்வொர்க் உள்கட்டமைப்பிற்கான எளிய மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5 ஜிக்கான சேவையை பெறலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு வரிசைப்படுத்தல் எரிக்சனால் மேற்கொள்ளப்படுவதால் 5ஜி சேவைக்கான ஆண்டெனாக்கள் அல்லது ரேடியோக்கள் உள்ளிட்ட எந்த உள்கட்டமைப்பு கூறுகளையும் அந்நிறுவனம் மாற்ற வேண்டிய அவசியமில்லை.
ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்ற சோதனைகளில் ஒப்போ ரெனோ5 ப்ரோ மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 3Gbps வேகத்தில் இணைய வசதி கிடைத்ததாக கூறப்படுகிறது.

Airtel
ஏர்டெல்


ஒரு பயனர் தங்கள் தொலைபேசிகள் அல்லது வைஃபை சாதனங்களில் பெறக்கூடிய தற்போதைய 4ஜி வேகத்தை விட 10 மடங்கு வேகமாக ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே நேரத்தில் யூசர்கள், நெட்வொர்க்கை கையாளும் போது தற்போதைய தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு தாமதத்தை கணிசமாகக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. அலைக்கற்றை வரிசை ஒதுக்கப்பட்டு, அரசின் ஒப்புதல்கள் கிடைத்த பிறகு படிப்படியாக யூசர்களுக்கு 5ஜி சேவைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: