ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையே 57 சதவீதம் உயர்த்திய ஏர்டெல்... வாடிக்கையாளர்கள் ஷாக்

குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையே 57 சதவீதம் உயர்த்திய ஏர்டெல்... வாடிக்கையாளர்கள் ஷாக்

ஏர்டெல்

ஏர்டெல்

தற்போது வரம்பற்ற அழைப்பு, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களுடன் ₹155-திட்டத்தை ஹரியானா மற்றும் ஒடிசாவில், வழங்கத் தொடங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  தொலை தொடர்பு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் 28 நாட்கள் மொபைல்போன் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச ரீசார்ஜின் விலையை சுமார் 57% அதிகரித்துள்ளது.

  இதற்கு முன்னதாக ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் ₹99 க்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த ரீசார்ஜ் பேக்கின் கீழ் 200 MB டேட்டா மற்றும் அழைப்புகளை வினாடிக்கு ₹2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்கியது. அதை மாற்றி  தற்போது வரம்பற்ற அழைப்பு, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களுடன் ₹155-திட்டத்தை ஹரியானா மற்றும் ஒடிசாவில், வழங்கத் தொடங்கியுள்ளது.

  ஏர்டெல் நிறுவனம் இந்த புதிய திட்டத்தின் சோதனையை இவ்விரு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் இந்தியா முழுவதும் அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

  இதையும் படிங்க : வெளியில் தெரியாத இதநோய்களையும் கண்டுபிடிக்கும் ஆப்பிள் வாட்ச்- புதிய ஆய்வு !

  முன்னதாக, நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் சலுகையை ₹79 இலிருந்து ₹99 ஆக உயர்த்தியபோது இதேபோன்ற மார்க்கெட்-டெஸ்டிங் செய்தது என்று அறிக்கை கூறியது.

  எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவுடன் கூடிய இந்த 28 நாள் அழைப்புத் திட்டங்களின் விலை ₹155க்கு வழங்கப்படுகிறது. பழைய ₹99 பேக்கில் டேட்டா குறைவாகவும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் கிடைத்தன.. ஆனால் இப்போது எஸ்எம்எஸ் சேவையைப் பெறுவதற்கு கூட, வாடிக்கையாளர் தனது மொபைல் ஃபோன் கணக்கை ₹155 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

  இந்த நடவடிக்கை அதன் சந்தை மதிப்பீட்டிற்கு ஒரு பெரிய தலைகீழ் மாற்றத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. ஏற்கனவே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மாதாந்திர பேக்குகளை விட அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்த ஏர்டெல் சேவை மேலும் தனது கட்டணத்தை 57% உயர்வை ஏற்படுத்தியது அதன் பயனர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Airtel, Recharge Plan