சில மாதங்களுக்கு முன்பு, அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலையை அதிகரித்தன. வாழ்நாள் சேவை, இன்கம்மிங் இலவசம், மினிமம் ரீச்சார்ஜ் என்ற எல்லா குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. பலரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய விலை குறைவான ப்ரீபெயிட் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல்லின் புதிய பிளான்கள் ரூ. 99, ரூ. 109 மற்றும் ரூ.111 விலையில் கிடைக்கின்றன. அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ப்ரீபெயிட் திட்டங்கள் விலை அதிகமாக இருந்தாலும், அழைப்புகள் மற்றும் டேட்டா இரண்டுமே பல திட்டங்களில் அன்-லிமிடட் என்று இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று திட்டங்களில், அன்லிமிடட் அழைப்புகள் மற்றும் டேட்டாவிற்கு பதிலாக, அன்லிமிடட் டாக்டைம் என்ற அம்சத்தை வழங்கியுள்ளது. எந்த நெட்வொர்க் நம்பருக்கு அழைத்தாலும், எவ்வளவு அழைப்புகள் இருந்தாலும் முழுக்க முழுக்க இலவசம் என்ற திட்டங்களுக்கு முன்பு, எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்ற ‘டாக்-டைம்’ அடிப்படையில் ப்ரீபெயிட் திட்டங்கள் இருந்தன. அந்த திட்டத்தை மீண்டும் தற்போது ஏர்டெல் கொண்டு வந்துள்ளது.
ஏர்டெல் ரூ . 99 ப்ரீபெயிட் திட்டம்
- இந்த திட்டம் ரூ. 99 டாக் டைம் உடன் 200 MB அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
- இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.
- அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டுமே இந்த திட்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
- SMS அனுப்புவதற்கு ரூ. 1 /- வசூலிக்கப்படும்
- STD அழைப்புகளுக்கு, ஒரு நிமிடத்துக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்
ஏர்டெல் ரூ. 109 ப்ரீபெயிட் திட்டம்
- இந்த திட்டம் ரூ. 99 டாக் டைம் உடன் 200 MB அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
- இதன் வேலிடிட்டி 30 நாட்கள்.
- அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டுமே இந்த திட்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
- SMS அனுப்புவதற்கு ரூ. 1 /- வசூலிக்கப்படும்
- STD அழைப்புகளுக்கு, ஒரு நிமிடத்துக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்
Also Read : 5ஜி நெட்வொர்க்கால் ஒரு புதிய பிரச்சனை! தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு எச்சரிக்கை..
ஏர்டெல் ரூ. 111 ப்ரீபெயிட் திட்டம்
- இந்த திட்டம் ரூ. 99 டாக் டைம் உடன் 200 MB அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
- இதன் வேலிடிட்டி ஒரு மாதம், அதாவது மாதத்தில் எத்தனை நாட்கள் உள்ளதோ, மாதம் முழுமைக்கும் செல்லுபடியாகும்.31 நாட்கள் இருந்தால், 31 நாட்களுக்கு திட்டம் செல்லுபடியாகும்.
- அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டுமே இந்த திட்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
- SMS அனுப்புவதற்கு ரூ. 1 /- வசூலிக்கப்படும்
- STD அழைப்புகளுக்கு, ஒரு நிமிடத்துக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்
Also Read : உங்கள் மொபைல் டேட்டாவை காலி செய்யும் ஆப்ஸ்கள்! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
இந்த திட்டங்கள் மூலம், தங்களின் மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், மினிமம் ரீச்சார்ஜ் செய்து கொள்வதன் மூலம், டாக்-டைம் மற்றும் டேட்டாவும் பெற முடியும். மாதாந்திர ரீச்சார்ஜுக்கு கணிசமான தொகையை செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த மூன்று பிளான்களிலும் டேட்டாவும் கூடுதலாக வழங்கப்படுகிறது. குறைவான டேட்டா பயன்பாடு கொண்டவர்களுக்கு இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.