ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஏர்டெல் வாடிக்கையாளருக்கு செம ஷாக் - 11 மணி முதல் ’இந்த’ சேவைகள் இல்லை!

ஏர்டெல் வாடிக்கையாளருக்கு செம ஷாக் - 11 மணி முதல் ’இந்த’ சேவைகள் இல்லை!

ஏர்டெல்

ஏர்டெல்

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இரவு 11 மணி முதல் 14ம் தேதி காலை 7 மணி வரை ரீசார்ஜ் சேவைகள் கிடைக்காது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது.

  மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட்டிற்காக உங்கள் நெட்வொர்க் அனுபவத்தை மேம்படுத்த, தொழில்நுட்ப பராமரிப்புச் செயல்பாட்டைத் திட்டமிடுகிறோம். இதன் காரணமாக, நவம்பர் 13, இரவு 11 மணி முதல் 14ம் தேதி காலை 7 மணி வரை ரீசார்ஜ் சேவைகள் கிடைக்காது. உங்கள் ஏர்டெல் பேக் முடிவடையகின்ற நிலையில் இருக்கும் பட்சத்தில், முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யவும். இந்த நேரத்தில், அழைப்புகள், SMS மற்றும் டேட்டா சேவைகள் தடையின்றி செயல்படும்" என தெரிவித்துள்ளது.

  இதையும் படிக்க : அதிரடி பணிநீக்கத்தை கையிலெடுத்த அமேசான் - டெக் ஊழியர்கள் கண்ணீர்

  மேலும் தற்போதே நீங்கள் ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால், i.airtel.in/RechTN1 என்ற லிங்கில் சென்று ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Airtel, Mobile networks, Recharge Tariff, SIM Card