ஏர்டெல் நிறுவனம் இதுவரை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சில ப்ரீபெய்ட் பிளான்களை நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக வேறொரு புதிய ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து ஏர்டெல் நிறுவனம் நீக்கியுள்ள 3 ப்ரீபெய்ட் பிளான்களில், லைப் இன்ஷுரன்ஸ் சலுகைகளை வழங்கிய 2 ரீசார்ஜ் பிளான்களும் அடங்கும். ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து ரூ.279, ரூ.179 மற்றும் ரூ.45 மதிப்பிலான ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக் திட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன. இந்த 3 பேக்குகளில் ரூ.279 மற்றும் ரூ.179 ஆகிய இரண்டு ரீசார்ஜ் பிளான்கள் வாடிக்கையாளர்களுக்கு லைப் இன்ஷுரன்ஸ் சலுகைகளை வழங்கிய பிளான்கள் ஆகும்.
மேற்கண்ட 3
ரீசார்ஜ் பிளான்களை நிறுத்தியுள்ள ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.128 மதிப்பிலான புதிய ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஏர்டெல் நிறுவனம் கைவிட்டுள்ள ரூ.279-க்கான ரீசார்ஜ் பேக்கானது வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்கி வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை பெற்று வந்தனர். தவிர இந்த பிளான் நாளொன்றுக்கு 100 SMS, 28 நாட்களுக்கு எந்த நெட்ஒர்க்கிற்கும் அன்லிமிடெட் கால் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கூடுதல் நன்மைகளாக (additional benefits) இந்த
ரீசார்ஜ் பேக் வாடிக்கையாளர்களுக்கு ஷா அகாடமியிலிருந்து (Shaw Academy) நான்கு வார கோர்ஸ்கள், விங்க் மியூசிக்கிற்கான ஃப்ரீ அக்ஸஸ், ரூ.4 லட்சம் மதிப்புள்ள எச்.டி.எஃப்.சி லைப் இன்ஷுரன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையின் ப்ரீமியம் கன்டன்ட் (premium content on Airtel Xstream service) உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது நீக்கப்பட்டுள்ள ரூ.279 ரீசார்ஜ் பேக்கின் நன்மைகள் புழக்கத்தில் உள்ள ஏர்டெல்லின் தற்போதைய ரூ.249 ப்ரீபெய்ட் பேக்கைப் போன்றது. நீங்கள் வழக்கமாக ரூ.279 ரீசார்ஜ் பேக் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு ரூ.249 ரீசார்ஜ் பேக் உபயோகமாக இருக்கும்.
ஆனால் இந்த பிளான் லைப் இன்ஷுரன்ஸ் சலுகைகளை வழங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பேக் நாளொன்றுக்கு1.5 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த பிளான் அன்லிமிடட் கால் சலுகை மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-களை வழங்குகிறது. இந்த பேக்குடன் கூடுதல் நன்மைகளாக 28 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக்கிற்கான இலவச சந்தாவை தருகிறது. இது தவிர யூஸர்கள் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் (FASTag transactions) ரூ.150 கேஷ்பேக் பெறுகிறார்கள். அமேசான் பிரைம் வீடியோவிற்கான ஒரு மாத ஃப்ரீ அக்ஸஸ் கிடைக்கிறது.
ஏர்டெலின் ரூ.179 ப்ரீபெய்ட்
ரீசார்ஜ் திட்டமும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாரதி ஆக்சா லைப் இன்ஷுரன்ஸ், 2 ஜிபி டேட்டா, 300 SMS உள்ளிட்டவற்றை வழங்கி வந்தது. இந்த பிளானில் ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அன்லிமிடட் கால்களும் அடங்கும். இந்த பிளானிற்கு மாற்றாக நீங்கள் மலிவான 2 ஜிபி டெய்லி டேட்டா பிளானைதேடுகிறீர்களானால் ரூ.298 மதிப்பிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் குறித்து பரிசீலிக்கலாம்.
Also read... Smartphone: இந்தியாவில் தங்கள் உற்பத்தியை நிறுத்திய பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!
28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடட் கால்ஸ், தினசரி 100 SMS, அமேசான் பிரைம் வீடியோ அக்ஸஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக்கிற்கான இலவச சந்தா, ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் (FASTag transactions) ரூ.150 கேஷ்பேக் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளை தருகிறது.ஏர்டெல் ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கையும் நீக்கியுள்ளதுடன், புதிய ரூ.128 பேக்கை சேர்த்துள்ளது. இந்த பிளான் எந்தவொரு டாக் டைம் அல்லது டேட்டா நன்மைகளையும் வழங்காது. லோக்கல் மற்றும் எஸ்.டி.டி அழைப்புக்கு வினாடிக்கு 2.5 பைசா மற்றும் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி SMS முறையே ரூ.1 மற்றும் ரூ.1.5 செலவாகும். இந்த புதிய ப்ரீபெய்ட் பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.