Airtel, BSNL, Jio பிராட்பேண்ட் பிளான்களின் அட்டகாசமான சலுகைகள்..

ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., ஜியோ ஆகியவை போட்டிபோட்டுக்கொண்டு அருமையான பிராட்பேண்ட் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். பெற்றுள்ளது.

ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., ஜியோ ஆகியவை போட்டிபோட்டுக்கொண்டு அருமையான பிராட்பேண்ட் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். பெற்றுள்ளது.

  • Share this:
கடந்த சில மாதங்களாக பலரும் உச்சரிக்கும் வார்த்தையாக ஒர்க் ப்ரம் ஹோம் (WFH) உள்ளது. கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு பலரையும் வீட்டிலேயே முடக்கியுள்ளது. முன்பை விட நிலைமை ஓரளவுக்கு முன்னேறி வந்தாலும் பல வேலைகள் இன்னும் வீட்டிலிருந்துதான் நடைபெறுகின்றன. பலரும் வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் திரைப் படங்களைப் பார்ப்பது, ஆன்லைன் கேம்களை விளையாடுவது, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது, தொலைவிலிருக்கும் சொந்தங்களுடன் உரையாடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

ஓடிடி சலுகைகளுக்கான தேவை அதிகரித்ததால், 2020ம் ஆண்டில் telcos சில மலிவு பிராட்பேண்ட் பிளான்களைக் கொண்டு வந்தன. ஏர்டெல், பி.எஸ்.என்.எல் மற்றும் ஜியோ ஆகியவை ரூ.1500-க்கு கீழ் வழங்கப்படும் பிளான்களை இங்கு பார்ப்போம்.

ஏர்டெலின் ரூ.499 பிராட்பேண்ட் பிளான்

இந்த பிராட்பேண்ட் பிளான் வரம்பற்ற இணைய வேகத்தை 40 Mbps வரை வழங்குகிறது. Airtel XStream, Wynk Music மற்றும் Shaw academy-ன் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

ஏர்டெல் ப்ரீமியம் ரூ.799 பிராட்பேண்ட் பிளான்

இந்த பிராட்பேண்ட் பிளான் 70 Mbps வரை வரம்பற்ற இணைய வேகத்தையும் Airtel XStream, Wynk Music மற்றும் Shaw academyன் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

ஏர்டெல் வலைத்தளம் அடிப்படை பிராட்பேண்ட் பிளான்களாக ரூ.499 மற்றும் ரூ.799-ஐ பட்டியலிட்டுள்ளது. எனினும், கடந்த மாதம் சில பயனர்கள் அடிப்படை பிளான்கள் முறையே ரூ.589 மற்றும் ரூ.943-ஆக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறினர்.

ஏர்டெல் Entertainment பிராட்பேண்ட் பிளான் ரூ.999-க்கு

Airtel XStream Entertainment பிராட்பேண்ட் பிளான் வரம்பற்ற இணையம் மற்றும் 200 Mbbs வரை அதிவேக அழைப்பை வழங்குகிறது. இந்த பிளானின் ஸ்ட்ரீமிங் நன்மைகளாக Airtel XStream box உடன் Zee5 Premium மற்றும் Amazon Prime-க்கான வருடாந்திர சந்தாவும் அடங்கும்.

ஏர்டெல் அல்ட்ரா பிராட்பேண்ட் பிளான் ரூ.1499

Airtel XStream Ultra பிராட்பேண்ட் திட்டம் 300 Mbbs வரை வரம்பற்ற இணைய வேகத்தையும், வரம்பற்ற உள்ளூர் மற்றும் STD அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த பிளானின் ஸ்ட்ரீமிங் நன்மைகள் Airtel XStream box உடன் Zee5 Premium மற்றும் Amazon Prime வருடாந்திர சந்தாவும் இதில் அடங்கும்.

Also read: இந்திய மென்பொருள் துறையின் தந்தை என போற்றப்படும் TCS நிறுவனர் மாரடைப்பால் மரணம்..

பி.எஸ்.என்.எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் ரூ. 449

BSNL தனது பிராட்பேண்ட் பிளானை அக்டோபரில் அறிமுகப்படுத்தியபோது, அது 90 நாள் விளம்பர காலத்திற்கு இருக்கும் என்று கூறியிருந்தது. தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த பிளானை முறைப்படுத்தினால் அது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஃபைபர் பேசிக் பிளான் என்றும் அழைக்கப்படும் ரூ.449 பிராட்பேண்ட் பிளான், 30 Mbps வேகத்தை 3.3 TB வரை வழங்குகிறது. அதைத் தாண்டினால் வேகம் 2 Mbps-ஆக குறைகிறது. இந்த பிளானை தேர்வுசெய்யும் பயனர்கள் இந்தியாவுக்குள் உள்ள எல்லா நெட்வொர்க்கு-க்கும் வரம்பில்லாமல் கால் செய்யும் வசதியைப் பெறுவார்கள். BSNL இந்தத் திட்டத்தை அந்தமான், நிக்கோபார் தவிர அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக வழங்குகிறது.

பி.எஸ்.என்.எல் ஃபைபர் பேசிக் ப்ளஸ் பிராட்பேண்ட் பிளான் ரூ.599

இது BSNL நிறுவனம் கடந்த வாரம் முன்வைத்த மற்றொரு அடிப்படை பிராட்பேண்ட் பிளான். தற்போதைய நிலவரப்படி, இந்த பிளான் FTTH சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 3,300 GB வரை 60 Mbbs வேகத்தை வழங்குகிறது. இந்த பிளானில் பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டா வழங்கப்படும். பயனர்களின் மாதாந்திர டேட்டா தீர்ந்தவுடன், வேகம் 2 Mbps-ஆக குறைக்கப்படும்.

பி.எஸ்.என்.எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் ரூ.799

இந்த பிளான் 100 Mbbs வேகத்தை 3,300 GB அல்லது 3.3 TB வரை வழங்குகிறது. முழு ஜி.பியையும் பயன்படுத்திய பிறகு, வேகம் 2 Mbps ஆக குறைகிறது.

பி.எஸ்.என்.எல் ப்ரீமியம் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் ரூ.999

BSNL Fibre Premium பிராட்பேண்ட் பிளான் 200 Mbbs வேகத்தை ரூ.999 க்கு 3300 GB அல்லது 3.3 TB வரை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 2 Mbbs வரை குறைகிறது. இந்த பிளான் Disney+ Hotstarக்கு இலவச பிரீமியம் பலனை அளிக்கிறது.

பி.எஸ்.என்.எல் அல்ட்ரா ஃபைபர் பிராட்பேண்ட் பிளான் ரூ.1499

இந்த பி.எஸ்.என்.எல். பிளான் 300 Mbps வேகத்தை 4TB வரை வழங்குகிறது. வரம்பைக் கடந்த பிறகு, வேகம் 4 Mbps ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த பிளான் இந்தியாவுக்குள் இருக்கும் எல்லா நெட்வொர்குக்கும் வரம்பில்லாமல் பேசும் வசதியைக் கொடுக்கிறது. இந்த பிளான் Disney+ Hotstar-க்கு இலவச பிரீமியம் உறுப்பினருடன் வருகிறது.

ஜியோ பைபர் பிளான்கள்:

JioFiber ரூ.939, ரூ.699 முதல் பிராட்பேண்ட் பிளான்களைக் கொண்டுள்ளது. இந்த பிளான்கள் முறையே 30 Mbps மற்றும் 60 Mbbs வேகத்தில் வரம்பற்ற இணையத்தை வழங்குகின்றன. இந்த பிளான்கள் OTT சந்தாக்களுடன் வரவில்லை. ஆனால் வரம்பில்லாமல் கால் செய்யும் வசதியை வழங்குகின்றன.

ஜியோ ரூ.999 பிராட்பேண்ட் பிளான்

இது வரம்பற்ற இணைய சேவையை 150 Mbps வரையிலான வேகத்துடன் வருகிறது. இந்த பிளான் மூலம் இலவசமாக பேசலாம், வரம்பு கிடையாது. மேலும், ரூ.1,000 மதிப்புள்ள Amazon Prime, Disney+ Hotstar உள்ளிட்ட 11 OTT ஆப்ஸ்களைப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

ஜியோ ஃபைபர் டயமண்ட் பிராட்பேண்ட் பிளான்

Diamond பிளானின் விலை ரூ.1,499 மற்றும் வரம்பற்ற இணைய சேவையை 300 Mbps வேகத்துடன், வரம்பில்லாமல் கால் செய்யும் வசதியையும் வழங்கும். இதுதவிர, கூடுதல் செலவில் 12 OTT ஆப்ஸ்களுக்கு இலவச சந்தாவையும் இது கொடுக்கிறது.

ஒரு மாதத்திற்கு முறையே 100 Mbps, 200 Mbps மற்றும் 300 Mbps வேகத்துடன் ரூ.699, ரூ.849 மற்றும் ரூ.999 என வரம்பற்ற டேட்டாவை வழங்கும் எக்சிடலின் பிராட்பேண்ட் பிளான்களையும் பயனர்கள் பரிசீலிக்கலாம். இந்த பிளான் 13 நகரங்களில் உள்ளது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: