இந்தியாவில் தற்பொழுது ஓடிடி தளங்களுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே டெலிகாம் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் ஓடிடி தளங்கள் சந்தாக்களின் விலையை குறைத்து வந்தாலும் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து மலிவான விலையில் சந்தாக்களை ஒடிடி நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும், தாங்கள் வழங்கும் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் ஓடிடி சந்தாவையும் இணைத்துள்ளது. இதில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களைப் பற்றிய முழு விவரம் இங்கே.
தொழில்நுட்ப வளர்ச்சி, இணைய பயன்பாடு ஆகியவை அதிகரித்து, இணைய சேவையை குறைவான விலையில் வழங்குவதற்கு உதவியாக இருந்துள்ளது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என்று எல்லா வகையான மொபைல் திட்டங்களிலுமே தினசரி பல ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், எஸ்எம்எஸ் சேவைகள் என்று இருந்தாலுமே சில நேரத்தில் அவை போதவில்லை. எனவே எவ்வளவு டேட்டா இருந்தாலும் போதாமல் சூழ்நிலை இருந்துள்ளது. இதற்காக தனிப்பட்ட முறையில் மொபைல் டேட்டா ரீசார்ஜ் செய்வது மட்டும் அல்லாமல், ஓடிடி தளங்களுக்காக தனியாக சந்தாவும் செலுத்தியும் வந்தனர். பிராட்பேண்ட் மற்றும் வைஃபை திட்டங்களுடன் ஓடிடி நன்மைகளையும் இணைந்து ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கி உள்ளது.
OTT தொகுப்புடன் வரும் ஜியோஃபைபர் ப்ரீபெயிட் திட்டங்கள்
ஜியோஃபைபர் ரூ. 999 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் டேட்டா பயன்பாட்டுடன் 150Mbps வேகத்தில் உங்களுக்கு இணைய டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். இதில் இலவசமாக வாய்ஸ் காலிங் மட்டும் அல்லாமல் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், வூட் செலக்ட், சோனி லைவ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட ஓ டி டி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.
ஜியோஃபைபர் ரூ. 1499 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் டேட்டா பயன்பாட்டுடன் 300Mbps வேகத்தில் உங்களுக்கு இணைய டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். இதில் இலவசமாக வாய்ஸ் காலிங் மட்டும் அல்லாமல் இந்தத் திட்டத்தில் நெட்பிலிக்ஸ் சந்தாவும் உள்ளது. மேலும், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், வூட் செலக்ட், சோனி லைவ் மற்றும் 14 க்கும் மேற்பட்ட ஓ டி டி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.
Also Read : சூப்பரா இருக்கே.. பட்ஜெட் விலையில் பக்காவான நோக்கியா ஸ்மார்ட்போன்.!
ஜியோஃபைபர் ரூ. 2499 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் டேட்டா பயன்பாட்டுடன் 500Mbps வேகத்தில் உங்களுக்கு இணைய டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். இதில் இலவசமாக வாய்ஸ் காலிங் மட்டும் அல்லாமல் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், வூட் செலக்ட், சோனி லைவ் மற்றும் 14 க்கும் மேற்பட்ட ஓ டி டி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.
ஜியோஃபைபர் ரூ. 3999 திட்டம்: இந்த திட்டத்தில், தினசரி 1gbps வேகத்தில், 30 நாட்கள் வேலிடிட்டியுடன், நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் உட்பட 15க்கும் மேற்பட்ட OTT சேனல்கள் சந்தாவுடன் வருகிறது.
ஜியோஃபைபர் ரூ. 8499 திட்டம்: இந்த திட்டத்தில், தினசரி 1gbps வேகத்தில், 6600gb டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியுடன், நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் உட்பட 15க்கும் மேற்பட்ட OTT சேனல்கள் சந்தாவுடன் வருகிறது.
OTT தொகுப்பு மற்றும் கூடுதல் நன்மைகளுடன் வரும் ஏர்டெல் ப்ரீபெயிட் திட்டங்கள்
ஏர்டெல் ரூ. 999 திட்டம்: 200Mbps வேகத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்வழங்கப்படும் இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆகிய ஓ டி டி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் தேங்க்ஸ்ஸின் நன்மைகளாக வழங்கப்படும் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், விஐபி சேவை, அபோல்லோ 24/7 சேவைகள், வின்க் பிரிமீயம் மற்றும் ஃபாஸ்ட்டாக் கேஷ்பேக் ஆகியவையும் அடங்கும்.
ஏர்டெல் ரூ. 1498 திட்டம்: 300Mbps வேகத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்வழங்கப்படும் இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், உடன், நெட்ஃபிலிக்ஸ் சந்தாவும் வழங்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் தேங்க்ஸ்ஸின் நன்மைகளாக வழங்கப்படும் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், விஐபி சேவை, அபோல்லோ 24/7 சேவைகள், வின்க் பிரிமீயம் மற்றும் ஃபாஸ்ட்டாக் கேஷ்பேக் ஆகியவையும் அடங்கும்.
ஏர்டெல் ரூ. 3999 திட்டம்: 1gbps வேகத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்வழங்கப்படும் இந்த திட்டத்தில் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி சந்தா வழங்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் தேங்க்ஸ்ஸின் நன்மைகளாக வழங்கப்படும் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், விஐபி சேவை, அபோல்லோ 24/7 சேவைகள், வின்க் பிரிமீயம் மற்றும் ஃபாஸ்ட்டாக் கேஷ்பேக் ஆகியவையும் அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.