Home /News /technology /

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏர்டெல் 5ஜி சேவை.! விலை மற்றும் மற்ற விவரங்கள் இதோ.!

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏர்டெல் 5ஜி சேவை.! விலை மற்றும் மற்ற விவரங்கள் இதோ.!

ஏர்டெல்

ஏர்டெல்

Airtel 5G service | ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நெட்வொர்க்குகள் இந்தியாவில் 5ஜி சேவை வெளியீடு குறித்து சில பெரிய உரிமைகோரல்களை முன்வைத்துள்ளன. அவற்றை பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவில் 5ஜி சேவை மிக விரைவில் அறிமுகமாக உள்ளது என்கிற செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். கடந்த சில ஆண்டுகளாக 4ஜி சேவையை பயன்படுத்தி வந்த நாம் தற்போது 5ஜி சேவைக்கு முன்னேறி வருகிறோம். 5ஜி சேவையை காட்டிலும் 4ஜி சேவை சற்று குறைந்த வேகத்தை கொண்டதாக இருக்கும். எனவே மக்கள் இறுதியாக வேகமான இணைய சேவையை அனுபவிக்க கூடிய வகையில் தற்போது இந்த 5ஜி சேவை பயன்பட உள்ளது. அந்த வகையில் 75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 5ஜி-க்கான நீண்ட கால காத்திருப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் இந்தியாவின் பல்வேறு மூலைகளிலும் இந்த 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால், இந்தியாவில் 5ஜி எப்போது வரும் என்கிற தெளிவான பதிலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நெட்வொர்க்குகள் இந்தியாவில் 5ஜி சேவை வெளியீடு குறித்து சில பெரிய உரிமைகோரல்களை முன்வைத்துள்ளன. அவற்றை பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

5ஜி சேவை எப்போது வரும்.?

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் ஆகஸ்ட் மாதத்தில் 5ஜி சேவைகளை வெளியிட உள்ளதாக சமீபத்தில் உறுதிப்படுத்தினார். சாம்சங், நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த மாத இறுதிக்குள் 5ஜி நெட்வொர்க்கை இந்தியாவில் பயன்படுத்தத் தொடங்க முடியும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 2024 ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்கள் உட்பட அனைத்து நகரங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்படும் என்பதை வெளிப்படுத்தி உள்ளது.ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி இது குறித்து கூறியபோது, “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” நிகழ்வு என்பது இந்தியா முழுவதும் 5ஜி வெளியீட்டுடன் கொண்டாடப்படும் என்று சமீபத்தில் கூறியுள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜியோ இதை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், இது விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை பைலட் முறை அடிப்படையில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read : '5ஜி' 4ஜியை விட 20 மடங்கு அதிக வேகம்... தகவல் தொடர்பு துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும்?

முதலில் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கைப் பெறும் நகரங்களின் பட்டியலில் ஏர்டெல் முதலில் 13 நகரங்களில் மட்டுமே 5ஜியை வெளியிடுவதாக கூறப்படுகிறது. அவை அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களாக இருக்கும்.விலை விவரங்கள்

ஏர்டெல் 5ஜி சேவையின் விலைகள் 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் சிடிஓ ரந்தீப் செகோன் கூறுகையில், “உலக அளவில் 5ஜி மற்றும் 4ஜி கட்டணங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இந்தியாவில் 5ஜி திட்டங்கள் 4ஜி கட்டணங்களைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

Also Read : வழக்கமான இடைவெளியில் மொபைல் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்துவது அவசியம் - வோடபோன் ஐடியா அறிக்கை.!

தற்போது, ​​வாடிக்கையாளர்கள் ரூ.500 முதல் ரூ.600 வரையிலான 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வரம்பற்ற பலன்களைப் பெறுகின்றனர். எனவே, 5ஜி திட்டங்களின் விலை இதே வரம்பில் இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5ஜி எவ்வளவு விலை அதிகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Airtel, India

அடுத்த செய்தி