ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

4G சேவைக்கான அதே விலையில் கிடைக்கும் 5G : அசத்தும் ஏர்டெல் நிறுவனம்!

4G சேவைக்கான அதே விலையில் கிடைக்கும் 5G : அசத்தும் ஏர்டெல் நிறுவனம்!

ஏர்டெல் 5G

ஏர்டெல் 5G

இந்த 5g சேவைக்கு என தனியாக விலைப்பட்டியல் எதுவும் தற்போதைக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏர்டெல்லின் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் 4ஜி பிளானை ரீசார்ஜ் செய்யும் அதே விலைக்கு 5ஜி சேவைகளையும் அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் தன்னுடைய 5g சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம். இதில் 5gக்கு என புதிதாக விலைபட்டியல் ஏதும் நிர்ணயம் செய்யபடாமல் ஏற்கனவே உள்ள 4g சேவையின் விலைக்கே 5g சேவை கிடைக்கும் என என்ற அறிவிப்பால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து வந்த 5g சேவை, பாரத பிரதார் நரேந்திர மோடியின் ஆசியோடு கடைசியாக இந்தியாவில் நடைமுறைக்கு வந்துவிட்டது. என்னதான் பல்வேறு சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் இருந்தாலும் 5g சேவையை பற்றிய ஆர்வம் கொண்ட மக்கள் அதிகளவிலேயே இருந்து வருகின்றனர்.

  ஏர்டெல்லின் இந்த 5g சேவையானது முதற்கட்டமாக இந்தியாவின் 8 முக்கிய மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விசேஷ அம்சம் என்னவென்றால் இந்த 5gக்கு என தனியாக புதிய சிம் கார்டை நாம் மாற்றிக்கொள்ள தேவையில்லை. ஏற்கனவே நாம் பயன்படுத்தும் 4ஜி சிம் கார்டை கொண்டு 5g சேவையை பெற முடியும். அதற்கு நம்மிடம் 5g சேவையை சப்போர்ட் செய்யும் மொபைல் இருந்தால் மட்டும் போதுமானது.

  மேலும் இந்த 5g சேவைக்கு என தனியாக விலைப்பட்டியல் எதுவும் தற்போதைக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏர்டெல்லின் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் 4ஜி பிளானை ரீசார்ஜ் செய்யும் அதே விலைக்கு 5ஜி சேவைகளையும் அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Read More: இப்போ 4ஜி.. விரைவில் 5ஜி - பிஎஸ்என்எல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

  ஆனால் 5ஜி சேவை இந்தியா முழுவதும் பிரபலமான பின் இதில் விலை மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5ஜி பிளஸ் சேவை நாம் இப்போது பயன்படுத்தும் 4ஜி சேவை விட 30 மடங்கு அதிக வேகமாக இருக்கும் எனவும் வாய்ஸ் காலிங் செய்யும் போது மிக தரமான அருமையான ஒரு அனுபவத்தை கொடுக்கும் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

  எப்பொழுதும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு யானை விலையில் சேவைகளை அளிக்கும் ஏர்டெல் நிறுவனம் அதுவரை 5ஜி க்கு என தனியாக விலை பட்டியலை நிர்ணயம் செய்யாதது பொது மக்களுக்கு மட்டுமல்லாமல், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குமே இன்ப அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஜியோ வின் மார்க்கெட்டிங் தந்திரத்தை ஏர்டெல் பயன்படுத்துகிறதோ என்பது போன்ற சந்தேகமும் இருக்கிறது.

  ஏனென்றால் ஜியோ சிம் கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது இப்படித்தான் 4g சேவைகள் அனைத்தும் இலவசம் என அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் வரை வாடிக்கையாளர்களை அந்த வலையில் முழுவதுமாக சிக்க வைத்தது அதன் பின் வாடிக்கையாளர்கள் அனைவரும் 4g சேவையின் ருசியை முழுவதும் அறிந்து, அதிலிருந்து வெளிவர முடியாத நிலையில் இருக்கும் போது தன்னுடைய விலையை உயர்த்தி வேலையை காட்டியது.

  ஏர்டெல் கிட்டத்தட்ட அதே முறையை பின்பற்றுவது போலவே தெரிகிறது. முதலில் இலவசமாக 5g சேவையை அறிமுகப்படுத்திவிட்டு அதன் பின்பு வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டிற்கு ஏற்ப விலை பட்டியலை நிர்ணயம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இன்டர்நெட் வேகத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

  Published by:Srilekha A
  First published:

  Tags: 5G technology, Airtel, Mobile networks, Smartphone