பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5G சேவையை முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் நாட்டில் படிப்படியாக துவங்கி உள்ளன. நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 முக்கிய நகரங்களில் ஜியோவும், 8 நகரங்களில் ஏர்டெல் நிறுவனமும் தத்தம் 5G சேவையை சோதிக்க துவங்கி உள்ளன.
ஏர்டெல் நிறுவனம் 5G Plus என்ற பெயரில் இந்த அதிவேக இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏர்டெல்லின் 5G Plus முதற்கட்டமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, சிலிகுரி, வாரணாசி மற்றும் நாக்பூர் நகரங்களில் துவக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மார்ச் 2023-க்குள் நாட்டின் அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
ஜியோவின் சராசரி டவுன்லோட் ஸ்பீட் ஏர்டெல் நெட்வொர்க்கை விட மிக அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தனது 5G சேவையின் நிலையான திறனை ஏர்டெல் இன்னும் நிரூபிக்கவில்லை. எனினும் வாய்ஸ் கால் குவாலிட்டி மற்றும் ஹைஸ்பீட் இன்டர்நெட் அடிப்படையில் 4G-யை விட 20 முதல் 30 மடங்கு அதிவேகத்தை மக்கள் பெறுவார்கள் என்று நிறுவனம் கூறுகிறது.
முக்கிய நகரங்களில் ஏர்டெல் 5G Plus-ன் இன்டர்நெட் ஸ்பீட்:
இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட்டிங் நிறுவனமான Ookla-வின் சமீபத்திய அறிக்கைபடி, டெல்லி நகரில் ஏர்டெல் 5G Plus-ன் சராசரி டவுன்லோட் ஸ்பீட் 197.98 Mbps ஆகவும், மும்பையில் 271.07 Mbps ஆகவும், கொல்கத்தாவில் 33.83 Mbps மற்றும் வாரணாசியில் 516.57Mbps ஆகவும் உள்ளது.
ஏர்டெல் 5G Plus சிம் & பிளான் விலைகள்:
4G சிம் வைத்துள்ள ஏர்டெல் யூஸர்கள் 5G Plus சேவையை பெறுவதற்கென்று தனி 5G சிம் எதையும் வாங்க தேவை இல்லை. ஏற்கனவே பயன்படுத்தும் 4G சிம் கொண்டே புதிய 5G Plus சேவையை அணுகலாம் என்று ஏர்டெல் கூறி இருக்கிறது. எனவே சிம் மாற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் பெரும்பாலான யூஸர்களுக்கு இருக்காது. ஏற்கனவே 5G-யை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எந்தவொரு ஏர்டெல் யூஸரும் ஏர்டெல் 5G Plus சேவையை பயன்படுத்த முடியும்.
Read More: 5G மொபைல் டேட்டா... எதன் வேகம் அதிகம்? ஏர்டெல்-லா அல்லது ஜியோ-வா.?
இந்தியா முழுவதும் எப்போது கிடைக்கும்?
அடுத்த ஆண்டிற்குள் அனைத்து முக்கிய இந்திய நகரங்களிலும் 5G சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ள ஏர்டெல், மார்ச் 2024-க்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் 5G Plus சேவையை துவக்க உள்ளதாக கூறியுள்ளது.
ஏர்டெல் 5G Plus-ஐ எப்படி ஆக்டிவேட் செய்வது?
ஏர்டெல்லின் 5G Plus-ஐ உங்கள் 5G போன்களில் பயன்படுத்துவதற்கு முன்னால் நீங்கள் வைத்திருக்கும் மொபைல் நிறுவனம் உங்கள் மாடலுக்கு Over the air எனப்படும் OTA அப்டேட்களை ரிலீஸ் செய்து விட்டதா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு இல்லை என்றால் அப்டேட் செய்து கொள்ளவும்.
Read More: 5G சேவையை பயன்படுத்த சாஃப்ட்வேர் அப்டேட் இல்லாமல் தவிக்கும் யூஸர்கள்
Airtel 5G என்ற இந்த லிங்க் மூலம் மக்கள் தங்கள் டிவைஸ் 5G-க்கு தயாராக உள்ளதா என்பதை ஏர்டெல் யூஸர்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Airtel