Home /News /technology /

இந்தியாவிற்கு வரும் ஏர்டெல் 5G.. சேவையை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன.?

இந்தியாவிற்கு வரும் ஏர்டெல் 5G.. சேவையை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன.?

ஏர்டெல் 5ஜி

ஏர்டெல் 5ஜி

Airtel 5G Launch In India | அக்டோபர் மாதம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. 5ஜி சேவை பற்றியும் நாம் சேவையை பெற செய்ய வேண்டியவை பற்றியும் ஏர்டெல் சில தகவல்களை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பின்னர் பல்வேறு விதமான சர்ச்சைகளை தாண்டி  கடைசியாக இந்தியாவில்  ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. ஏர்டெல் சி இ ஓ கோபால் விட்டலின் அறிவிப்பின்படி இன்னும் சில வாரங்களில் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 5ஜி சேவை குறித்து பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நிலவி வந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் அவற்றுக்கு பதில் அளித்துள்ளது.

ஏர்டெல் 5ஜி சேவை உங்கள் நகரத்திற்கு வருவது எப்போது.?

இன்னும் ஒரு மாதத்திற்குள் தன்னுடைய 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை மற்றும் இன்னும் சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. ஏர்டெல்லின் அறிவிப்பின்படி பார்த்தால் வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம் என்பது தெரிகிறது.



2023 ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை விரிவுபடுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் இந்தியா முழுவதும் தன்னுடைய 5ஜி சேவையை விரிவாக்க சிறிது கால அவகாசம் எடுக்கும் என்பது தெரிகிறது. அவரவர் நகரங்களில் 5ஜி சேவை எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள “ஏர்டெல் தேங்க்ஸ்” ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த 5ஜி சேவையை நீங்கள் பெற வேண்டுமெனில் உங்களிடம் 5ஜி மொபைல் போன் இருக்க வேண்டியது அவசியம்.

Also Read : இந்தியாவில் 5ஜி சேவைகளின் விலை நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் - காரணம் தெரியுமா.?

ஏர்டெல் 5ஜி மூலம் கிடைக்கும் பயன்கள்:

இப்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவை விட 20-ல் இருந்து 30 மடங்கு வேகமான இன்டர்நெட் சேவையை நாம் பெற முடியும். மேலும் தடையின்றி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கும், அதிவேக இன்டர்நெட் பயன்பாட்டிற்கும் உதவும் “நெட்வொர்க் ஸ்லைஸிங்” என்னும் புதிய வசதியை இந்த 5ஜி சேவை கொடுக்கிறது. இது முக்கியமாக வீட்டிலிருந்தே வேலை செய்யும் பணியாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஏர்டெல் 5ஜி சேவை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்.?

5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் 5ஜி ஸ்மார்ட்போன் கண்டிப்பாக தேவை. இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய மற்றொரு செய்தியையும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற சேவை அப்க்ரேட் செய்யும் போது நம்முடைய சிம் கார்டை மாற்ற வேண்டியது இருக்கும். உதாரணத்திற்கு ஃபோர் ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அப்போது 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டு வைத்திருந்த அனைவரும் 4ஜி சேவையை பெறுவதற்காக புதிய சிம் கார்டை வாங்க வேண்டி இருந்தது.

 

Also Read : டிஜிட்டல் தடயங்களை ஹேக்கர்களிடம் சிக்காமல் பாதுகாக்க உதவும் 5 யோசனைகள்.! 

ஆனால் இப்போது ஏர்டெல் 5ஜி சேவையை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய 4ஜி சிம் கார்டையே பயன்படுத்திக் கொள்ளலாம் புதியதாக 5ஜி சிம் கார்டு வாங்க வேண்டியது இல்லை என்னும் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. உங்கள் நகரத்தில் ஏர்டெல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டவுடன் உங்கள் மொபைலில் நெட்வொர்க் செட்டிங்கிற்கு சென்று 5ஜி சேவையை ஆன் செய்து வைத்துக் கொண்டால் மட்டும் போதும் என அறிவுறுத்தியுள்ளது.



இன்னும் 5ஜி சேவைக்கான கட்டண விவரங்களை பற்றி எந்த அறிவிப்பையும் ஏர்டெல் வெளியிடவில்லை. அடுத்த மாதம் முக்கிய நகரங்களுக்கு 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் போது அதற்கான கட்டண விவரங்களும் வெளியாகும் என தெரிகிறது.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Airtel, Technology

அடுத்த செய்தி