ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இதுவரை இல்லாத மனிதர்களின் முகத்தை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு - இதில் காத்திருக்கும் பேராபத்து

இதுவரை இல்லாத மனிதர்களின் முகத்தை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு - இதில் காத்திருக்கும் பேராபத்து

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் OpenAi என்ற செயற்கை நுண்ணறிவு தளம் டெக்ஸ்ட் அடிப்படையிலான இமேஜை உருவாக்கி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

செயற்கை நுண்ணறிவு பற்றி தான் கடந்த சில நாட்களாக வைரலாக பேசப்பட்டு வருகிறது. ரோபோட்கள் எவ்வாறு செயல்படும், செயற்கை நுண்ணறிவு எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதைப் பற்றியெல்லாம் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு தளங்கள், செயலிகள் வியப்பூட்டும் வகையில் செயல்படுகின்றன. சமீபத்தில் புகைப்படங்களை உருவாக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல், அழகான, அட்டகாசமான புகைப்படங்களை உருவாகியுள்ளது. ஆனால் இதில் மிகப்பெரிய ஆபத்து மறைந்துள்ளது.

ஒரு செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புகைப்படங்களில் இருக்கும் முகங்கள் எதுவுமே உண்மையல்ல. அதாவது இதுவரை இல்லாத மனிதர்களின் முகத்தை செயற்கை நுண்ணறிவு உருவாக்கி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் OpenAi என்ற செயற்கை நுண்ணறிவு தளம் டெக்ஸ்ட் அடிப்படையிலான இமேஜை உருவாக்கி வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பலவிதமான மேம்பாடுகளை கண்டு அனைத்து தரப்பினரையும் அசத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. யூசர்கள் உள்ளிடும் வார்த்தைகள், வாக்கியங்களுக்கு ஏற்றவாறு அற்புதமான புகைப்படங்களை உருவாக்கி தருவதில் முன்னணியில் இருக்கிறது.

உதாரணமாக பார்ட்டியில் இருக்கும் மக்கள் என்பதை உள்ளிட்டால், அதற்கு ஏற்றார் போல அசத்தலான புகைப்படத்தை இந்த ai உருவாக்கித் தருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் மனிதர்கள் உண்மையான மனிதர்கள் போல தோன்றினாலும் இந்த மனிதர்கள் யாருமே உண்மையல்ல. அதாவது இதுவரை வாழ்ந்திராத மனிதர்களின் முகங்களை இந்த செயற்கை நுண்ணறிவு மாடல் உருவாக்கி இருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ai உருவாக்கிய புகைப்படங்களை ட்விட்டர்-இல் ஒரு யூசர் பதிவுசெய்து, இது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை பற்றி தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது இவை உண்மையாவே ஒரு கேமராவை வைத்து, ஒரு பார்ட்டியில் இருக்கும் பெண்களைப் புகைப்படம் எடுத்தது போலத்தான் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய பார்ட்டி பெண்கள் என்ற தலைப்பில் வெளியான புகைப்படங்களின் ட்வீட் இங்கே. சரி இந்த புகைப்படத்தில் அப்படி என்ன ஆபத்து இருக்கிறது, அல்லது ஏற்படலாம் என்பதை பற்றி நீங்கள் யோசிக்கலாம். கிட்டத்தட்ட உண்மையான பெண்கள் போல தோன்றினாலும், இந்த படங்களை உற்று நோக்கினால், உங்களுக்கு பல நுணுக்கமான வித்தியாசங்கள் தெரியும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்களுக்கு நிறைய பற்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இவர்கள் சருமம் சாதாரணமாக இருப்பதை விட அதிகமாக பளபளப்பாக இருக்கிறது. மேலும் என்னுடைய கழுத்து கொஞ்சம் வித்தியாசமாகவும் உள்ளது. அதிலிருக்கும் டாட்டூ ஆகியவற்றையெல்லாம் சேர்த்து பார்க்கும் பொழுது, இவை ஏலியன்கள் போல காட்சியளிக்கின்றன.

இந்த  தளம் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே ஆண்டிலேயே இவ்வளவு விஷயத்தை தானாகவே கற்றுக் கொண்டு இதேபோன்ற முகங்களை வெளியிடக் கூடிய செயற்கை நுண்ணறிவால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது கொஞ்சம் நினைக்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!

First published: