சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது அந்நிறுவன ஊழியர்களை மிரட்சி அடைய செய்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், அதன் CEO பராக் அகர்வால், அதன் CFO மற்றும் வேறு சில உயர் அதிகாரிகளை நீக்கினார். இதைதொடர்ந்து ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் ட்விட்டரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தப்பவில்லை.
இந்நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க் புதன்கிழமை ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கும் என்று தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் செவ்வாயன்று நூற்றுக்கணக்கான நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாகவும் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு தானே பொறுப்பு என்று தெரிவித்துள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: டிவிட்டர் ஒப்பந்தம் நஷ்டமா? டெஸ்லா பங்குகளை அதிரடியாக விற்ற எலான் மஸ்க்!
இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்றும் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நிறுவனத்தின் மனித வளத் தலைவர் லோரி கோலர், வேலை இழக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் நான்கு மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் வெகுஜன ஆட்குறைப்பு, நிறுவனத்தின் 18 ஆண்டுகால வரலாற்றில் நிகழும் முதல் பெரிய அளவிலான பணி நீக்கம் என்றும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Mark zuckerberg