தினமும் ரூ.1 லட்சம் பரிசு... இழந்த மார்க்கெட்டை பிடிக்க பரிசுகளை அள்ளிவீசும் டிக்டாக்...!

அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் ஏப்ரல் 30-ம் தேதி 90-வது இடத்தில் இருந்த டிக்டாக், மறுநாளில் டாப் இடத்துக்கு வந்தது.

Lingam A S | news18
Updated: May 7, 2019, 8:23 PM IST
தினமும் ரூ.1 லட்சம் பரிசு... இழந்த மார்க்கெட்டை பிடிக்க பரிசுகளை அள்ளிவீசும் டிக்டாக்...!
டிக்டாக்
Lingam A S | news18
Updated: May 7, 2019, 8:23 PM IST
டிக் டாக் செயலிக்கு நீதிமன்றம் தடை விதித்து பின்னர் தடை நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் தனது மார்கெட்டை பிடிக்க அதிரடி ஆஃபர்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடான டிக்டாக், சில ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை டிக் டாக்-ஐ பயன்படுத்தி எடுத்த வீடியோக்கள் வைரல் ஹிட் அடித்தது.

எனினும், டிக்டாக் கலாசாரத்தை சீரழிப்பதாக ஒருசாரர் பொங்கிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் டிக்டாக் வாசிகள் தங்களது திறமையை தொடர்ந்து உலகுக்கு எடுத்துக்காட்டி வந்தனர்.


இதயும் படிங்க.... டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு!

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த உத்தரவால் பிளேஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பைட்டான்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

தடை காரணமாக ஒரு நாளைக்கு ரூ.3.48 கோடி நஷ்டமடைவதாக அந்நிறுவனம் கோரிக்கை விடுத்து, தடையை நீக்கக் கோரியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமே இவ்விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியது.

Loading...

வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வந்தது. அப்போது, “உயர் நீதிமன்றத்தின் தடைக்குப் பிறகு, டிக் டாக் செயலியில் இருந்து 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

18 வயதுக்கு குறைந்தவர்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால் டிக் டாக் செயலி தானாக செயலிழந்துவிடும்” என்று டிக்டாக் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இதயும் படிங்க... குழந்தைகள் தனியுரிமை விதிமீறல்; டிக் டாக் மீது ரூ.40 கோடி அபராதம்

“சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. டிக் டாக் நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும். சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது” என்ற நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தடைக்கு முன்னதாக இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் செயலிகளில் ஒன்றாக டிக்டாக் இருந்தது. தற்போது சறுக்கலுக்குப் பிறகும் டிக்டாக் மீதான மவுசு குறையவில்லை.

அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் ஏப்ரல் 30-ம் தேதி 90-வது இடத்தில் இருந்த டிக்டாக், மறுநாளில் டாப் இடத்துக்கு வந்தது. ஒரே ஒரு அறிவிப்புதான். மே 1 முதல் மே 16 வரை தினமும் மூன்று யூசர்களுக்கு டிக்டாக் நிறுவனம் ரு.1 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டதே டாப் இடத்துக்கு வரக்காரணம்.

பரிசு அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்க டிக்டாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Also See...

First published: May 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...