ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

16 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள்.. ஒரே இரவில் வெளியே அனுப்பிய கூகுள்!

16 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள்.. ஒரே இரவில் வெளியே அனுப்பிய கூகுள்!

ஒரே இரவில் கணக்கை அழித்து வெளியே அனுப்பிய கூகுள்!

ஒரே இரவில் கணக்கை அழித்து வெளியே அனுப்பிய கூகுள்!

"நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள்" என்ற ஒரு செய்தி கூட எனக்கு வரவில்லை.  கூகுள் போன்ற பெரிய முதலாளிகள் கூட இரக்கமற்றவர்களாக இருக்கலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மைக்ரோசாப்ட் , சோமோட்டோ, போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆட்குறைப்பு பணியை தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில் கடந்த வாரம் கூகுள் நிறுவனமும் தனது 12,000 பணியாட்களை நீக்க போவதாக அறிவித்தது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "தோராயமாக 12,000 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்.  அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கு நாங்கள் ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை அதிக நேரம் எடுக்கும்,” என்று அவர் கூறினார்.

அப்படி விடுவிக்கப்படும் ஊழியர்கள் சிலருக்கு எந்தவித எச்சரிக்கையும், தகவல் பரிமாற்றமும் கொடுக்காமல் அவர்களை பணியில் இருந்து விடுவித்துள்ளது.  கூகுளில் இன்ஜினியரிங் மேலாளராகப் பணியாற்றிய ஜஸ்டின் மூர், தனது சமூக வலைதளத்தில் பணிநீக்கம் குறித்து தனக்கு எந்த முன் எச்சரிக்கையும் வரவில்லை என்று பகிர்ந்துள்ளார். பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் மூர், நள்ளிரவில் தனது கணக்கு திடீரென செயலிழந்ததாகப் பகிர்ந்துள்ளார்.

"16.5 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பணியாற்றிய பிறகு, இன்று அதிகாலை 3 மணிக்கு 12,000 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக, தானியங்கி  கணக்கை செயலிழப்பு  மூலம் நான் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. என்னிடம் வேறு எந்த தகவலும் இல்லை. நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள் என்ற ஒரு செய்தி கூட எனக்கு வரவில்லை.  கூகுள் போன்ற பெரிய முதலாளிகள் கூட இரக்கமற்றவர்களாக இருக்கலாம்" என்று எழுதியுள்ளார்.

கூகுளின் மற்றொரு பணியாளர் பொறியாளர் ரிச்சர்ட் ஹே, அவர் 15.5 ஆண்டுகள் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், மூரைப் போலவே அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தனது இடுகையில் கருத்துத் தெரிவித்தார்.

First published:

Tags: Google