100 Mbps வேகத்துடன் மலிவு விலையிலான பிராட்பேண்ட் திட்டங்கள் என்னென்ன?

பிராட்பேண்ட் திட்டங்கள்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், ஜியோஃபைபர் மற்றும் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ஆகிய நெட்ஒர்க்குகள் பட்ஜெட் விலையில் வழங்கும் திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் பிற நன்மைகள் பற்றி காண்போம்.

  • Share this:
இணைய சேவை வழங்குநர்களான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், ஜியோஃபைபர் மற்றும் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ஆகியவை தாராளமான டேட்டாக்களுடன் சீரான இணைய வேகத்தை வழங்கும் பல வகையான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் சில ஸ்ட்ரீமிங் நன்மைகளுடனும் வருகின்றன. அந்த வகையில் ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களை ரூ.399 விலையிலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ரூ.499 விலையிலும் வழங்கி வரும் இந்த நேரத்தில், ​​பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் இப்போது 30Mbps இணைய வேகத்தை வழங்கும் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மேற்கண்ட நெட்ஒர்க்குகள் பட்ஜெட் விலையில் வழங்கும் திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் பிற நன்மைகள் பற்றி காண்போம்.

ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், ஜியோ ஃபைபர், பிஎஸ்என்எல் பாரத் ஃபைபரின் பிராட்பேண்ட் திட்டங்கள்:

1. JioFiber-ன் Rs.399 பிராட்பேண்ட் திட்டம்: இந்த திட்டம் 30Mbps வேகத்தில் உண்மையிலேயே அன்லிமிடெட் டேட்டா பேக்கை வழங்குகிறது. இந்த திட்டம் எந்த ஒரு இலவச OTT சந்தாக்களையும் வழங்கவில்லை. ஆனால் அன்லிமிடெட் கால் விருப்பத்தை வழங்குகிறது.

Also Read:  ரஜினி போல ஸ்டைல் செய்து கெத்து காட்ட நினைத்து மேடையில் பல்பு வாங்கிய நபர் - வைரல் வீடியோ!

2. AirtelXStream-ன் ரூ.499 பிராட்பேண்ட் திட்டம்: இந்த பிராட்பேண்ட் திட்டம் அன்லிமிடெட் இன்டர்நெட் வசதியை 40Mbps வேகத்துடன் வழங்குகிறது. பிற கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமிக்கான ஆகியவற்றிற்கு இலவச சந்தாவை வழங்குகிறது. அதேபோல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலியில் வூட் பேசிக், ஈரோஸ் நவ், ஹங்காமா ப்ளே, ஷெமரூ எம் மற்றும் அல்ட்ரா ஆகியவற்றுக்கான அணுகலும் கிடைக்கும்.

3. BSNL Bharat Fibre-ன் ரூ.449 பிராட்பேண்ட் திட்டம்: ஃபைபர் பேசிக் பிளான் என்றும் அழைக்கப்படும் இந்த திட்டம் 3.3 TB வேகம் அல்லது 3300 GB FUP வரம்பு வரை 30Mbps வேகத்தை வழங்குகிறது. FUP வரம்பை அடைந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்கள் இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலை மேற்கொள்ளலாம்.

Also Read:  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

ரூ.800-க்கு கீழ் கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், ஜியோ ஃபைபர், பிஎஸ்என்எல் பாரத் ஃபைபரின் பிராட்பேண்ட் திட்டங்கள்:

1. JioFiber-ன் ரூ.699 பிராட்பேண்ட் திட்டம்: இந்த திட்டம் உண்மையிலேயே அன்லிமிடெட் இன்டர்நெட் வசதியை 60 Mbps வேகத்தில் வழங்குகிறது. ரூ.399 திட்டத்தை போலவே இந்த திட்டம் எந்த OTT சந்தாக்களையும் வழங்கவில்லை. மேலும் இந்த திட்டம் அன்லிமிடெட் கால் விருப்பத்தை வழங்குகிறது.

2. BSNL Bharat Fibre-ன் ரூ.599 மற்றும் ரூ .799 பிராட்பேண்ட் திட்டங்கள்: இந்த திட்டங்களை புதிய வாடிக்கையாளர்களால் மட்டுமே பெற முடியும். ஏற்கனவே உள்ள திட்டத்தின் வேலிடிட்டி முடித்த பிறகு வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் ரூ.599 திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இதன் இணைய சேவை 300 Mbps வேகத்தை அடையும் வரை இந்த திட்டம் 60 Mbps வேகத்தை வழங்குகிறது. மேலும் டேட்டா வரம்பு முடிந்துவிட்டால் இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டம் 3300 GB அல்லது 3.3 TB டேட்டா வரை 100 Mbps வேகத்தில் வழங்குகிறது. FUP வரம்பை அடைந்ததும், வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. AirtelXStream-ன் ரூ.799 பிராட்பேண்ட் திட்டம் மற்றும் ஏர்டெல் பிரீமியம் ரூ.799 பிராட்பேண்ட் திட்டம்: இந்த பிராட்பேண்ட் திட்டம் அன்லிமிடெட் இன்டர்நெட் வசதியை 70 Mbps என்ற வேகத்துடன் வழங்குகிறது மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக், ஷா அகாடமியின் சந்தா போன்ற பிற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
Published by:Arun
First published: