முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஆதார் நம்பரை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் AePS - எவ்வாறு செயல்படுகிறது?

ஆதார் நம்பரை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் AePS - எவ்வாறு செயல்படுகிறது?

AePS - எவ்வாறு செயல்படுகிறது?

AePS - எவ்வாறு செயல்படுகிறது?

ஆதார் கார்டு வைத்திருப்பவர் பிஓஎஸ் அல்லது மைக்ரோ ஏடிஎம்-களில் தனது பயோமெட்ரிக் தகவலை வழங்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

நாட்டிலுள்ள உள்ள அனைத்து ரீடெயில் பேமென்ட் சிஸ்டம்களையும் ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) இணைந்து ஆதார் அடிப்படையிலான நிதி பரிமாற்ற சேவையை (ABRS - Aadhaar based Remittance Service) வழங்குகிறது. இந்த சேவைக்கு ஆதார் எனேபிள்டு பேமென்ட் சிஸ்டம்ஸ் (Aadhaar Enabled Payment Systems) என்று பெயர். இது AePS என்று சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. ஆதார் நம்பரை கொண்டு பணம் செலுத்தும் வழிமுறையே இந்த AePS. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் நம்பரை பயன்படுத்தி பணம் செலுத்தவும், பாயின்ட் ஆஃப் சேல் (PoS) அல்லது மைக்ரோ ATM -களில் ஆதார் வெரிஃபிகேஷன் வழங்குவதன் மூலம் பணம் செலுத்தவும் அனுமதிக்கிறது.

சுருக்கமாக சொன்னால் வங்கி வாடிக்கையாளருக்கு அவரது ஆதார் நம்பர்களை அடையாளமாக கொண்டு அவரது அக்கவுண்டில் இருந்து பணம் அனுப்ப அதிகாரமளிக்கும் சேவையாகும். ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் AePS-ஐ பயன்படுத்தும் போது நிதி பரிவர்த்தனை தொடங்கு பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை. ஆதார் நம்பரை மட்டுமே என்டர் செய்தால் போதும். AePS மொத்தம் பல வகையான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது.

AePS வழங்கும் பேங்கிங் சர்விஸ்களில் கேஷ் டெபாசிட், கேஷ் வித்ட்ரா, பேலன்ஸ் விசாரணை, மினி ஸ்டேட்மென்ட், ஆதார் டு ஆதார் ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர், ஆதன்ட்டிகேஷன், பீம் ஆதார் பே உள்ளிட்டவை அடக்கம்.

AePS மெஷின் எவ்வாறு வேலை செய்கிறது?

AePS மெஷின் POS மெஷின் போல் செயல்படுகிறது. டெபிட்/கிரெடிட் கார்டு பின்னுக்கு பதில், வணிகர் வாடிக்கையாளரின் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும் மற்றும் வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் தரவை பயன்படுத்தி பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும்.

AePS-லிருந்து பணம் எடுப்பது எப்படி?

ஆதார் கார்டு வைத்திருப்பவர் பிஓஎஸ் அல்லது மைக்ரோ ஏடிஎம்-களில் தனது பயோமெட்ரிக் தகவலை வழங்க வேண்டும். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் அவரது பணம் எடுக்கும் பரிவர்த்தனை நடைபெறும்.

AePS வழங்கும் பிற சர்விஸ்கள்:

இகேஒய்சி, பெஸ்ட் ஃபிங்கர் டிட்டெக்ஷன், டோக்கனைசேஷன், ஆதார் சீடிங் ஸ்டேட்டஸ்

AePS-யில் பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளருக்கு தேவைப்படும் இன்புட்ஸ்கள்:

பேங்க்கின் பெயர், ஆதார் நம்பர், ஆதார் என்ரோல்மென்ட்டின் போது கேப்ச்சர் செய்யப்பட்ட ஃபிங்கர்பிரின்ட்

AePs சர்விஸை பயன்படுத்தி பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான படிப்படியான செயல்முறை:

ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை வைத்திருப்பவர், விரைவாகவும் எளிதாகவும் பரிவர்த்தனைகளை செய்ய AePS வசதியை பயன்படுத்தலாம்.

- உங்கள் லோக்கல் பேங்கிங் கரஸ்பாண்டென்ட்டிற்கு செல்லவும்.

- அங்கிருக்கும் PoS மெஷினில் உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.

- பின் ட்ரான்ஸாக்ஷன் டைப்பை தேர்வு செய்யவும்.

- பேங்க்கின் பெயரை என்டர் செய்யவும்.

- நீங்கள் ட்ரான்ஸாக்ஷன் செய்ய விரும்பும் தொகையை என்டர் செய்யவும்.

- இப்போது பேமென்ட்டை உறுதிப்படுத்த உங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்கவும்.

- ட்ரான்ஸாக்ஷன் வெற்றிகரமாக முடிந்த பிறகு ரசீது கிடைக்கும்.

First published:

Tags: Technology