Home /News /technology /

5ஜி ஏலம் - வரிசை கட்டி நிற்கும் அதானி, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள்.!

5ஜி ஏலம் - வரிசை கட்டி நிற்கும் அதானி, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள்.!

5G bidding

5G bidding

5G Bidding Race | குஜராத் வட்டத்திற்கு மட்டும் யூனிஃபைடு லைசென்ஸ் கோரி தகவல் தொடர்பு துறையிடம் அதானி நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. எ

அதானி குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க உள்ளன. மத்திய தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் வட்டத்திற்கு மட்டும் யூனிஃபைடு லைசென்ஸ் கோரி தகவல் தொடர்பு துறையிடம் அதானி நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. எனினும், 5ஜி அலைக்கற்றையை வைத்து கஸ்டமர் மொபிலிட்டி மார்க்கெட் உள்ளே நுழையப் போவதில்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. விமான நிலையங்கள், கடற்படை தளங்கள் போன்ற இடங்களில் உள்ள தங்களின் சொந்த வணிக தேவைகளுக்காக மட்டுமே 5ஜி ஏலத்தில் பங்கேற்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிகர சொத்து மதிப்பு எவ்வளவு

மத்திய தகவல் தொடர்பு துறையிடம் நிறுவனங்கள் தங்களுடைய நிகர சொத்து மதிப்பு விவரங்களை தாக்கல் செய்துள்ளன. அதன்படி அதானி நிறுவனத்திடம் ரூ.248.35 கோடி நிகர மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.75,887 கோடி நிகர மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் ரூ.2,795 கோடி முதலீட்டாளர்களின் தொகை ஆகும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.1.97 லட்சம் கோடி ஆகும். இதில், 1.54 லட்சம் கோடி முதலீட்டாளர்களின் பணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.80,918 கோடி ஆகும். இதில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்ப்பு ரூ.32,119 கோடி ஆகும்.



ஜூலை 26ல் ஏலம்

5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. சில ஃபிரிகியூயன்சி பேண்டுகளுக்கு மிகுந்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போதைய ஏலத்தில் 600MHz, 700MHz, 800MHz, 900MHz, 1,800MHz, 2,100 MHz, 2,300 MHz, 3,300 MHz மற்றும் 2,600 MHz ஆகிய அலைவரிசைகளுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது.

Also Read : 5ஜி நெட்வொர்க்கால் ஒரு புதிய பிரச்சனை! தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு எச்சரிக்கை..

மதிப்பு எவ்வளவு

அரசிடம் உள்ள மொத்த 5ஜி அலைவரிசைகளின் மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்ட ஏலம் மூலமாக ரூ.80 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடிக்கான வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read : 3 ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் தரும் ஹைபிரிட் முதலீடு!

இந்த அலைக்கற்றைகளுக்கான பணத்தை 20 சரி பங்கு தவணைகளாக ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நிறுவனங்கள் செலுத்திவிட வேண்டும். 10 ஆண்டுகள் கழித்து எந்தவித எதிர்கால நிபந்தனைகளும் இன்றி இந்த அலைவரிசைகளை அரசிடமே நிறுவனங்கள் திரும்ப ஒப்படைக்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, India

அடுத்த செய்தி