ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, உடனடியாக நீங்கள் ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் ஆக்டிவேட் செய்ய வேண்டும் அல்லது உங்கள் அக்கவுண்ட் லாக் செய்யப்படலாம்.
ஃபேஸ்புக் யூஸர்கள் மார்ச் 17ஆம் தேதிக்குள் இதைச் செய்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை ஆக்டிவேட் செய்யாதவர்களின் அக்கவுண்ட்கள் லாக் செய்யப்படுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இரண்டு அடுக்கு ஆதண்டிகேஷன் கொண்ட நடவடிக்கை ஆகும்.
யூஸர்கள் சிலருக்கு ஃபேஸ்புக் அனுப்பியுள்ள நோட்டிஃபிகேஷன் செய்தியில், “உங்கள் அக்கவுண்ட்-ஐ அன்லாக் செய்ய ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் டர்ன் ஆன் செய்யுங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “உங்கள் அக்கவுண்ட் மார்ச் 17ஆம் தேதி லாக் செய்யப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் என்றால் என்ன
சமூக ஊடகங்களில் சிலரது அக்கவுண்ட்கள் குறி வைத்து முடக்கப்படுகின்றன. குறிப்பாக ஃபேஸ்புக்கில் இது அதிகம் நடைபெறுகிறது. அதிக அபாயத்தை எதிர்கொண்டுள்ள அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதனால் தான் ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் உருவாக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்களால் அதிகம் குறி வைக்கப்படும் இந்த அக்கவுண்ட்களுக்கு 2 ஸ்டெப் ஆதண்டிகேஷன் மூலமாக பாதுகாப்பு வழங்குகிறது ஃபேஸ்புக். இதை நீங்கள் எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
இரண்டு அடுக்கு ஆதண்டிகேஷன் ஆன் செய்வது எப்படி
- உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் பக்கத்தை திறந்து, செக்யூரிட்டி மற்றும் லாகின் செட்டிங்ஸ் செல்லவும்.
- ஸ்குரோல் டவுன் செய்து, டூ ஃபேக்டர் ஆதண்டிகேஷன் என்பதை தேர்வு செய்து அதை கிளிக் செய்யவும்.
- நீங்கள் சேர்க்க விரும்பும் செக்யூரிட்டி மெத்தட் தேர்வு செய்து, ஸ்கிரீனில் உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
- இங்கு காணப்படும் மூன்று வகையான செக்யூரிட்டி முறைகளில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.
Also Read : நெட்பிளிக்ஸ் இலவசமாக வேண்டுமா - ஏர்டெல்லின் அசத்தலான 2 பிளான்கள்
ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் டர்ன் ஆன் செய்வது எப்படி
- ஃபேஸ்புக் பக்கத்தின் டாப் ரைட் கார்னரில் உள்ள அக்கவுண்ட் என்பதன் மீது கிளிக் செய்யவும்.
- செட்டிங்ஸ் மற்றும் பிரைவேஸி மீது கிளிக் செய்து செட்டிங்க்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.
- செக்யூரிட்டி மற்றும் லாகின் என்பதை தேர்வு செய்யவும்.
- இப்போது ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் வசதியை நீங்கள் தொடங்கலாம்.
- வெல்கம் ஸ்கிரீனில் ‘நெக்ஸ்ட்’ என்பதை கிளிக் செய்யவும்.
- ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் ஃபெனிபிட்ஸ் என்பதன் மீது கிளிக் செய்யவும்.
- இப்போது ஸ்ராங்கர் பாஸ்வேர்ட் மற்றும் டூ ஸ்டெப் ஆதண்டிகேஷன் உள்ளிட்ட பாதுகப்பு அம்சங்களை தேர்வு செய்யவும்.
- ஃபிக்ஸ் நவ் என்பதை கிளிக் செய்து, ஸ்கிரீனில் வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.