• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தொற்று அபாயங்களை குறைக்க வருங்காலத்தில் AC-க்களில் ரேடியன்ட் கூலிங் சிஸ்டம் வர வாய்ப்பு..

தொற்று அபாயங்களை குறைக்க வருங்காலத்தில் AC-க்களில் ரேடியன்ட் கூலிங் சிஸ்டம் வர வாய்ப்பு..

காட்சிப் படம்

காட்சிப் படம்

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் (UBC) ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள 60 நகரங்களில் ஏர் கண்டிஷனிங் தேவைகளை கணக்கிட்டது.

  • Share this:
ஏசி-க்களில் பயன்படுத்தப்படும் குளிரூட்டல் பேனல்களின் (chilled panels) புதிய அமைப்பு காற்று சீரமைப்பை மாற்றக்கூடியது, உட்புற நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. கோவிட் -19 காரணமாக பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி கிடப்பதால் கூடுதல் காற்றோட்டம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் (UBC) ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள 60 நகரங்களில் ஏர் கண்டிஷனிங் தேவைகளை கணக்கிட்டது.

அவர்கள் ஆற்றல் செலவுகளை( energy costs) அவற்றின் குளிரூட்டும் முறையுடன் குளிர்ந்த பேனல்கள் மற்றும் இயற்கை காற்றோட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒப்பிட்டனர். இதில் அப்ளைடு எனர்ஜியின் கோவிட் -19 பதிப்பில் வெளியிடப்பட்ட முடிவுகள் மாற்று தீர்வு தேவையான ஆற்றலில் 45% வரை சேமிக்க முடியும் என்பதை காட்டியது. அதே நேரத்தில் கட்டிடக் குடியிருப்பாளர்கள் வசதியாக இருப்பதையும், அறைகள் போதுமான அளவு புதுப்பிக்கப்படுவதையும் இந்த முடிவுகள் உறுதி செய்துள்ளது.

யுபிசி-யின் கட்டிடக்கலை மற்றும் இயற்கை கட்டிடக்கலை பள்ளியில் பேராசிரியர் ஆடம் ரிசானெக் கூறுகையில், "பல பொது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தொழிற்துறை அமைப்புகள், கோவிட் -19 மற்றும் பிற தொற்றுகள் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க கட்டிடங்களுக்குள் பிரெஷ்ஷான, வெளிப்புறக் காற்றின் ஓட்டத்தை அதிகரிக்க பரிந்துரைக்கின்றன" என்றார். இருப்பினும், உட்புற புதிய காற்று விகிதங்களை அதிகரிக்க வழக்கமான HVஏ.சி (Heating, ventilation, and air conditioning)அமைப்புகளை தொடர்ந்து சார்ந்திருந்தால், உண்மையில் ஆற்றல் நுகர்வு இரட்டிப்பாகலாம்.

ஏனென்றால் HVஏ.சி-யின் இயல்பு இது என்றும் குறிப்பிட்டார். புதிய வகை ரேடியன்ட் கூலிங் சிஸ்டம்ஸ் (radiant cooling systems) வெளியில் சூடாக இருக்கும்போது கூட மக்கள் தங்கள் ஜன்னல்களைத் திறந்து வைக்க அனுமதிக்கின்றன. இந்த மாற்று அமைப்புகளால் போதுமான அளவிலான வெப்ப வசதியை(thermal comfort) வழங்க முடியும், நோயிலிருந்து பாதுகாப்பை அதிகரிக்கும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலில் தாக்கத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிக்குழு கூறியுள்ளது.

இந்த குழு சிங்கப்பூரின் வெப்ப மற்றும் ஈரப்பத காலநிலையில் தங்கள் குளிரூட்டும் முறையை நிரூபித்தது. இதற்காக குழுவினர் சவ்வுகளை (membrane) தடுக்கும் ஒடுக்கத்திற்குள் அடைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட குழாய்களின் அமைப்பைக் கொண்ட ஒரு பொது பெவிலியனை கட்டினர். ஆய்வின் போது இது மனித உடலைச் சுற்றியுள்ள காற்று வெப்பநிலையை மாற்றாமல் குடியிருப்பாளர்கள் வசதியாகவும், குளிராகவும் உணர அனுமதித்தது.

மேலும் இதே ஆய்வை கோடைகால வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரும் பகுதிகளில் குறிப்பாக டொராண்டோ, பெய்ஜிங், மியாமி, மும்பை, நியூயார்க் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குளிர்ந்த பேனல் அமைப்புகள்(chilled panel systems) பல ஆண்டுகளாக இருந்தாலும், ஆராய்ச்சி குழுவால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மென்படலத்தை(special membrane devised) சேர்ப்பது அனைத்து காலநிலைகளிலும் உள்ள பாரம்பரிய HV ஏ.சி அமைப்புகளுக்கு வணிக ரீதியாக சாத்தியமான மாற்றாக மாற்றுவதற்கான முக்கிய அம்சமாக இருக்கலாம் என்று ரிசானெக் குறிப்பிட்டார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: