இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் மாணவர்கள் குடியிருப்பு பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கடந்த செவ்வாய் கிழமை அன்று தெரிவித்துள்ளது. இதில் 150 மாணவர்கள் விண்வெளி நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மே 16 முதல் மே 28 வரை 'யுவ விக்யானி கார்யக்ரம்' (யுவிகா) என்கிற நிகழ்வை நடத்தியது. இதில் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரோவில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்கிற கனவு பலருக்கும் இருக்கும். சிறு வயது முதலே இஸ்ரோ பற்றி கேள்விப்பட்ட பலரும் அதில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்கிற கனவை கொண்டு இருப்பார்கள். இப்படி பெரிய கனவுகளை கொண்டவர் ஒரு கட்டத்தில் அதை நோக்கிய பயணத்தை தொடங்குவார்கள். இவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டத்தை தான் இஸ்ரோ அமைப்பும் அறிவித்திருந்தது. இஸ்ரோ அறிக்கையின்படி, வகுப்பறை விரிவுரைகள், நடைமுறைச் செயல்பாடுகள், புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் உரையாடல், ஆய்வகம் வருகை, வானத்தைப் பார்த்தல், ரோபோடிக் அசெம்பிளி மற்றும் கான்சாட் சோதனைகள் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இதன் பிறகு அனைத்து மாணவர்களும் SDSC SHAR- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இவர்கள் எல்லோரும் இஸ்ரோ தலைவரான எஸ் சோமநாத்துடன் நேருக்கு நேர் சந்திக்க கூடிய வாய்ப்பையும் பெறுவார்கள். வருகின்ற திங்கட்கிழமை அன்று, திரு சோமநாத் அவர்கள் விர்ச்சுவலாக YUVIKA-2022 நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். அடுத்த இரண்டு வாரங்களில் தாங்கள் சந்திக்க உள்ள மூத்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் உரையாடும் வாய்ப்பை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Read More : உதவித் தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் : இந்த வாரத்தில் இதற்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்
விண்வெளி தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் பொறியியல், வானியற்பியல், வானியல், கணிதம், பொருள் அறிவியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பரந்த வாய்ப்புகள் மற்றும் களங்களைப் பற்றி மாணவர்களுக்கு அவர் விளக்கினார். பள்ளி மாணவர்களுக்கான சிறப்புத் திட்டமான யுவிகா, கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை வழங்குவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் இஸ்ரோ முன்பு கூறியது. "நமது தேசத்தின் எதிர்கால தூண்களான இளைஞர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிகழ்வு" என்றும் கூறினார். இஸ்ரோ பற்றிய கனவு உள்ள மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் வாய்ப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.