ஆதார் ஒரு இந்தியர் வைத்திருக்கக்கூடிய மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. வங்கி கணக்கை திறப்பது அல்லது அரசாங்கத் திட்டத்தில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல செயல்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண், வங்கிக் கணக்கு திறப்பு, KYC உள்ளீடுகள் மற்றும் பிற பல உத்தியோகபூர்வ பணிகளுக்கு கட்டாயமானதாக உள்ளது.
இந்திய குடிமக்களுக்கு 12 இலக்க ஆதார் எண்ணை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தேசிய தொலைநிலை உணர்திறன் மையத்துடன் (NRSC) இணைந்து புவன் ஆதார் என்ற புதிய வசதியை தொடங்கியுள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த புதிய இணையதளம், இந்தியா முழுவதும் உள்ள ஆதார் மையங்கள் மற்றும் இருப்பிடங்கள் போன்ற தகவல்களை வழங்குகிறது.
யுஐடிஏஐ இஸ்ரோ மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து புவன் ஆதார் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள ஆதார் சேவை மையங்கள் பற்றிய தகவல்களை புவன் ஆதார் இணையதளத்தில் பார்க்க முடியும். இதுபோக வேறு சில சேவைகளும் உள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், யுஐடிஏஐ மற்றும் என்ஆர்எஸ்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்தது. இந்தியா முழுவதும் உள்ள ஆதார் மையங்களின் தகவல் மற்றும் இருப்பிடங்களை வழங்கும் புவன்-ஆதார் இணையதளத்தை நாசாவின் தேசிய தொலைநிலை உணர்திறன் உருவாக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. குடியிருப்பாளர்களின் தேவைகளின் அடிப்படையில் தொடர்புடைய ஆதார் மையங்களை இருப்பிடம் வாரியாக தேடும் வசதியையும் இந்த போர்டல் வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
Also Read : பிரதமர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 பெற பதிவு செய்து பலன் பெறுவது எப்படி?
அதன் பின்னர் ஜூலை 15ம் தேதி ஆதார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ட்வீட்டில், "குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்க UIDAI தனது தொடர்ச்சியான முயற்சிகளில் ஆதார் மையங்களின் புவி-இடவெளி காட்சியை எளிதாக்கும் 'புவன் ஆதார்' போர்ட்டலை அறிமுகப்படுத்துகிறது"
புவன் ஆதார் இணையதளத்தைப் பயன்படுத்தி உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தை மூன்று வழிகளில் கண்டறியலாம்:
- ஆதார் சேவா கேந்திரா
- பின் கோடு
-மாநில வாரியாக ஆதார் சேவா கேந்திரா ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் குடியிருப்புக்கு அருகேயுள்ள ஆதார் மையத்தை அறிந்து கொள்ளலாம்.
https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி நீங்கள் புவன் ஆதார் இணையதளத்திற்குள் நுழைய வேண்டும். அங்கு ஆதார் மையங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வெவ்வேறு பகுதிகளில் வட்டங்களுடன், இந்தியாவின் வரைபடத்தை காணலாம்.
திரையின் இடது புறத்தில், நான்கு ஆப்ஷன்களைக் கொண்ட மெனு காண்பிக்கப்படும். அதன் அருகே மையங்கள், ஆதார் சேவா கேந்திரா மூலம் தேடுதல், பின் கோடு மூலம் தேடுதல் மற்றும் மாநில வாரியான ஆதார் சேவா கேந்திரா ஆகிய விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம், உங்களின் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டறியலாம்.
Also Read : பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்.. இனி எல்லாமே ஈஸி தான்!
புவன் ஆதார் இணையதளத்தில், இயற்கையான வண்ண செயற்கைக்கோள் படங்களின் உயர் தெளிவுத்திறன் பின்னணியுடன், முழுமையான புவியியல் தகவல் சேமிப்பு, மீட்டெடுப்பு, பகுப்பாய்வு மற்றும் ஆதார் மையங்களுக்கான அறிக்கையிடல் ஆகியவற்றை எளிதாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.