புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் PVC கார்டுகள்.. அதைப் பெறுவது எப்படி?
மாறும் காலத்தோடு ஈடுகட்ட ஆதார் அட்டையும் ஹைடெக் ஆகிவிட்டது. UIDAI கடந்த அக்டோபரில் ஆதார் அட்டையை முற்றிலும் புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை (மாதிரிப்படம்)
- News18 Tamil
- Last Updated: November 16, 2020, 9:46 PM IST
ஆதார் அட்டையை மழையில் நனையாமலும், கிழியாமலும், சேதமாகாமலும் பத்திரமாக வைக்க நாம் அதிக சிரமத்தை மேற்கொள்கிறோம். நம்மில் சிலர் அதை லேமினேட் செய்தும் வைத்துள்ளோம். மடிந்துவிடாமல் இருக்க பர்சில் வைப்பதையும் தவிர்க்கிறோம். ஆனால் இப்போது இப்படி எதையும் யோசிக்கத் தேவையில்லை. மாறும் காலத்தோடு ஈடுகட்ட ஆதார் அட்டையும் ஹைடெக் ஆகிவிட்டது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கடந்த அக்டோபரில் ஆதார் அட்டையை முற்றிலும் புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பாலிவினைல் குளோரைடு (PVC) அட்டையாக மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதிய PVC ஆதார் அட்டை ATM அல்லது டெபிட் கார்டு போன்ற அளவில் இருக்கும். அதை வேலட்டில் எளிதாக எடுத்துச் செல்லலாம். இந்திய குடிமக்கள் தங்கள் ஆதாரை PVC கார்டில் பெற ரூ.50 பெயரளவு கட்டணம் செலுத்துவதன் மூலம் மறுபதிப்பு செய்யலாம். இந்த மாற்றம், பதிவு செய்யப்பட்ட மொபைல் பயனர்களுக்கு மட்டும் இல்லை. அட்டையை ஆர்டர் செய்ய ஒருவர் பதிவு செய்யப்படாத அல்லது மாற்று மொபைல் எண்களையும் பயன்படுத்தலாம்.
ஒரு நபர் தனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி முழு குடும்பத்திற்கும் ஆதார் PVC கார்டுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். "உங்கள் ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை அல்லாமல், சரிபார்ப்பதற்கான (Authentication) OTP பெற நீங்கள் எந்த மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம். எனவே, ஒரு நபர் தனது முழு குடும்பத்திற்கும் ஆன்லைனில் ஆதார் PVC கார்டுகளை ஆர்டர் செய்யலாம். https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற இணைப்பைப் பின்தொடர்வதன் மூலம் இப்போதே ஆர்டர் செய்யுங்கள்" என்று UIDAI ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
புதிய ஆதார் PVC அட்டையின் அம்சங்கள்
1. சிறந்த அச்சுத் தரம் மற்றும் லேமினேஷன்.
2. எங்குவேண்டுமென்றாலும் எடுத்துச் செல்ல வசதியானது.
3. இது ஹாலோகிராம், கில்லோசே பேட்டர்ன், கோஸ்ட் படம் & மைக்ரோடெக்ஸ்ட் (Hologram, the Guilloche Pattern, a Ghost image & Microtext.) உள்ளிட்ட சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களைப் கொண்டுள்ளது.
4. QR குறியீட்டின் மூலம் உடனடி ஆஃப்லைன் சரிபார்ப்பை செய்யலாம்.
5. சற்று புடைப்பாக ஆதார் சின்னம் இருக்கும் (Embossed Aadhaar logo).
பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மொபைல் எண்களுக்கு ஆதார் PVC கார்டை விண்ணப்பிக்கும் முறை
1. UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறந்து, 'My Aadhaar' பிரிவின் கீழ் 'Order Aadhaar PVC Card' என்பதைக் கிளிக் செய்யவும்.
2. முதலில் உங்கள் 12 இலக்க ஆதார் எண் / 16 இலக்க மெய்நிகர் ஐடி / 28 இலக்க EIDயை உள்ளிடவும்.
3. இப்போது படத்தில் காட்டப்பட்டுள்ள பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும். பதிவுசெய்த மொபைல் எண்ணில் நீங்கள் OTP ஐப் பெறுவீர்கள், அதை நீங்கள் உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
4. பதிவு செய்யப்படாத மொபைல் எண்களுக்கு, "My Mobile number is not registered" விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் பதிவு செய்யப்படாத / மாற்று மொபைல் எண்ணை உள்ளிடவும். “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும்.
5. சமர்ப்பித்த பிறகு, உங்கள் PVC கார்டின் மாதிரிக்காட்சி நகலைப் பெறுவீர்கள்.
6. இப்போது கட்டண விருப்பத்தைச் சொடுக்கவும், PVC கார்டை ஆர்டர் செய்ய ரூ. 50 செலுத்தவும். ஆர்டர்கள் செய்ய வரம்புகள் ஏதும் இல்லை மற்றும் ஒவ்வொரு ஆர்டருக்கும் இது பொருந்தும். நீங்கள் அப்ளை செய்த நாள் போக ஐந்து வேலை நாட்களுக்குள் ஆதார் PVC அட்டை ஸ்பீட் போஸ்ட் மூலம் வந்துசேரும்.
உங்கள் ஆதார் PVC அட்டையின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது
1. ஆதார் PVC அட்டையின் நிலையை UIDAI இணையதளத்தில் அறியலாம்.
2. அந்த 'Check Aadhaar PVC card status' என்பதன் கீழ் 'My Aadhaar' தாவலைக் கிளிக் செய்க.
3. நீங்கள் 28 இலக்க SRN, 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். 'Check Status' என்பதைக் கிளிக் செய்த பிறகு உங்கள் ஆதார் PVC அட்டையின் நிலை பிரதிபலிக்கப்படும்.
4. ஆதாரின் பிற வடிவங்களான e-ஆதார், m-ஆதார், ஆதார் கடிதம், ஆதார் அட்டை என அனைத்தும் சமமாக செல்லுபடியாகும்.
UIDAI வழங்கிய அந்த ஆதார் வடிவங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி உண்டு. "Order Aadhaar PVC Card" சேவை ஆன்லைனில் "Order Aadhaar Reprint" சேவையைப் போலவே உங்களுக்குத் தேவைக்கேற்ப ஆன்லைனில் கிடைக்கிறது.

#AadhaarPVCcard
You can use any mobile number to receive OTP for authentication, regardless of the registered mobile number in your Aadhaar. So, one person can order Aadhaar PVC cards online for the whole family.Follow the link https://t.co/TVsl6WZqlp to order now. pic.twitter.com/ivoaQ7QgAN
— Aadhaar (@UIDAI) November 11, 2020