புதிய ஆங்கில சொல்லானது ’ஆதார்’ - ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்ப்பு

புதிய ஆங்கில சொல்லானது ’ஆதார்’ - ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்ப்பு
  • Share this:
ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில சொற்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஆதார், நான் வெஜ், பஸ் ஸ்டாண்டு ஆகியவை இடம்பிடித்துள்ளன.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆங்கில அகராதியை தொகுத்து வழங்குகிறது. இந்த அகராதியின் 10 ஆவது பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பதிப்பில் 384 இந்திய ஆங்கில சொற்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட புதிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், ஆதார், ஷாடி, ஆன்டி, பஸ் ஸ்டேண்ட், டீம்டு யுனிவர்சிட்டி, எப்.ஐ.ஆர்., நான்-வெஜ், வீடியோ கிராப் உள்ளிட்ட சொற்களும் அடங்கும். 26 புதிய சொற்களில் 22 சொற்கள் அச்சு பதிப்பிலும், எஞ்சிய 4 சொற்கள் டிஜிட்டல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஹலோ, ஷேர்சாட், ஜியோ நியூஸ் ஆகியவற்றில் பின் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்