Home /News /technology /

விண்ணில் பாய உள்ள சென்னை ஐஐடியின் அக்னி பான் ராக்கெட்..!

விண்ணில் பாய உள்ள சென்னை ஐஐடியின் அக்னி பான் ராக்கெட்..!

ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸ்

அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை ஏவி, விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் பூவி வட்ட பாதையில் நிலைநிறுத்த முடியும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது சென்னை ஐ ஐ டி மாணவர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் தயாரித்துள்ள அக்னிபான் ராக்கெட். தற்போதைய நிலையில் நம்நாட்டில் இஸ்ரோவின் ராக்கெட்டுகள் மூலம் பெரிய அளவிலான சாட்டிலைட்டுக்கள் மட்டும் விண்ணில் ஏவப்படுகின்றன . அக்னிபான் ராக்கெட் மூலம் சிறிய அளவிலான சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்த முடியும்.

    அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை ஏவி, விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் பூவி வட்ட பாதையில் நிலைநிறுத்த முடியும். இதனால் விண்வெளி துறையில் எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அக்னிபான் ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள பொறியாளர் சரண்யா.

    ராக்கெட் வடிவமைப்பு என்றால் யாருக்கும் எட்டாத தொலைவில் இருந்தது. அதனை தற்போது மாறி, சாதாரண தகர கொட்டகையின் கீழ், கண்டெய்னர்களையே அலுவலக அறையாக்கி அங்கு ராக்கெட் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருவது இதுவரையான பணி இலக்கணத்தை உடைப்பதாக அமைந்துள்ளது .

    Read More: இனி ஆர்டிஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை... ஆன்லைன் மூலம் 58 சேவைகள் அறிமுகம்!

    விண்வெளி துறையில் தனியார் அனுமதிக்கப்படுவர் என்கிற மத்திய அரசின் முடிவையடுத்து, சென்னை ஐஐடியின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் ராக்கெட்டினை வடிவமைத்து வருகிறது. வானம் வசப்படும் என்பதை "அக்னி பான்" ராக்கெட் நிருபிக்க நியூஸ் 18 சார்பில் வாழ்த்துகிறோம்..

     

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: IIT Chennai, IIT Madras, ISRO

    அடுத்த செய்தி