ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மனிதர்களைப் போல சிரிக்கும் ரோபோ !

மனிதர்களைப் போல சிரிக்கும் ரோபோ !

ரோபோ

ரோபோ

மனிதர்களைப் போலவே சிரிக்கும் ரோபோவை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ப எப்படி சிரிக்க வேண்டும்? என்று கற்றுக்கொடுக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaJapanJapan

  மனிதர்களைப் போலவே சிரிக்கும் ரோபோவை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ப எப்படி சிரிக்க வேண்டும்? என்று கற்றுக்கொடுக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

  இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வரலாறு காணாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. விதவிதமான இயந்திரங்கள், மொபைல் சாதனங்கள் வரிசையில் ரோபோக்களும் ஒருபுறம் வளர்ந்து வருகிறது. மக்கள் செய்யும் வேலைகளை சுலபமாக்க ரோபோக்களைப் பயன்படுத்துவது அதிகமாகி விட்டது.

  வீட்டில் ஒருவராய் இருக்கும் ரோபாக்கள் நம்முடன் சிரித்துப் பழகினால் எப்படி இருக்கும்.. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் குஷியாக இருப்பார்கள். அப்படி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களைப் போல் சிரிக்கும் ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

  ஜப்பானிய கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சிரிக்கும் ரோபோவிற்கு எரிக்கா என பெயரிட்டுள்ளனர். சிரிக்கும் வகையில் கண்டறிப்பட்ட ரோபாவாக இருந்தாலும் எப்படி சிரிக்க வேண்டும் அதாவது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஏற்றார் போல் சிரிக்கும் முறை குறித்து கற்றுக் கொடுக்கின்றனர். முன்னதாக உள்ள ரோபோக்கள் அனைத்தும் சொல்லும் வேலைகளை செய்வதோடு,

  சில கமெண்ட்டுகளின் வாயிலாக பதிலளிக்கும். இந்நிலையில் தான் ரோபோக்கள் இயந்திரம் போன்று இல்லாமல் சிரித்தால் எப்படி இருக்கும் என யோசித்து தான் இந்த முடிவை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சிரிப்பை நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலானது மற்றும் அதிக நேரம் மற்றும் பெரிய அளவிலான ஆராய்ச்சிகள் தேவை என்றும் கியோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  தற்போது ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட சிரிக்கும் ரோபோவுக்கு, ஒரு மனிதன் ஆரம்பத்தில் எப்படி சிரிக்கிறான்மற்றும் அதற்கு ரோபோ எப்படி பதிலளிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால் இதை முழுமையாக உருவாக்க வேண்டும் என்றால் ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பை எப்படி கண்டறிவது, இரண்டாவது சிரிப்பதா வேண்டாமா என முடிவு செய்வது மற்றும் மூன்றாவது எந்த விஷயங்களுக்கு எப்படி சிரிக்க வேண்டும்பொருத்தமான சிரிப்பு எது என மூன்று துணை அமைப்புகளை வடிவமைக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  மேலும் ரோபோக்களால் சிரிப்பைக் கண்டறியவோ அல்லது நகைச்சுவையாக சிரிக்கவோ முடியாது. எனவே தான் ஆராய்ச்சியாளர்கள் AI அமைப்பிற்கான நகைச்சுவையின் மனித நுணுக்கங்களை மீண்டும் உருவாக்க விரும்புகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சகஜமாக ரோபோக்களுக்கும் மக்களுக்கும் இடையே இயற்கையான உரையாடல்களை மேம்படுத்த முடியும் என நம்புகின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். நிச்சயம் இந்த முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் ஜாலியாக இனி ரோபாக்களுடன் நாம் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

  Read More: விண்ணில் பாய உள்ள சென்னை ஐஐடியின் அக்னி பான் ராக்கெட்..!

  மேலும் நண்பர்களுடன் பேசுவது போல் ஒரு ரோபோவுடன் அரட்டையடிப்பது போன்று புதிய ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்றால் 10 முதல் 20 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

  Published by:Srilekha A
  First published: