தமிழ் இசை ஆராய்ச்சிக்காக இணையதளம் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழ் இசை ஆராய்ச்சிக்காக புதிய இணையதளத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கியுள்ளார்.

  நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் மேடை ஏறிய ஏ.ஆர்.ரஹ்மான் ஒருவிரல் புரட்சி பாடலைப் பாடினார். மேலும் கலாநிதிமாறனுக்கு நன்றி தெரிவித்த அவர், தான் புதிதாக ஆரம்பிக்கும் கருணாமிர்தசாகரம் என்ற தமிழிசை இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். இந்த இணையதளத்தின் உருவாக்கத்தில் பணியாற்றிய குட்டி ரேவதி கருணாமிர்தசாகரம் நூலைப் பற்றி பேசினார்.

  இந்த இணையதளத்தை ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை நிர்வகிக்கிறது. 3000 ஆண்டு வரலாறு கொண்ட தமிழ் இசை குறித்த ஆராய்ச்சியை இந்த இணையதளம் மேற்கொள்ளும்.

  1859 - 1919 காலகட்டத்தில் ஆபிரகாம் பண்டிதர், தமிழ் இசையின் வரலாற்றை முன் வைத்து கருணாமிர்தசாகரம் என்ற நூலை 1917-ம் ஆண்டு எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: