இந்தியாவில் இணையம் உபயோகிக்கும் எண்ணிக்கையில் 10 பேரில் 6 பேர் தினசரி அல்லது வாரந்தோறும் தவறான தகவல்களைப் பெறுவதாகச் சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
சோசியல் மீடியாக்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் தொற்று மற்றும் தடுப்பூசிகள் குறித்து வாட்ஸ்அப், ட்விட்டர் மூலம் பரவிய வதந்திகளைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதுவும் பெருகி வரும் ஆன்லைன் தொழில் நுட்பம் மற்றும் சோசியல் மீடியாக்களின் எழுச்சி போலியான தகவல்கள் வேகமாகப் பரவ முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்தியா போன்ற நாடுகளில் 10ல் 6 பேர் தவறான தகவல்கள் மக்களுக்கு வருவது தெரியவந்துள்ளது.
யூகோ மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆதரவுடன் பாய்ண்டர் இன்ஸ்டிட்யூட் 18 முதல் 57 வயதுடைய நபர்கள் Gen X, Millennial மற்றும் Gen Z மூன்று குழுக்களாகப் பிரித்து நடத்திய கணக்கெடுப்பில், 10 பேரில் 6 பேர் தினசரி அல்லது வாரந்தோறும் தவறான தகவல்களைப் பெறுவதாகவும், ஆய்வில் பங்கேற்ற சுமார் 50 சதவீதம் பேர் தங்களது குடும்பம் போலியான தகவல்களைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
Also Read : தடை செய்யப்பட்டது VLC மீடியா பிளேயர் - உலக சினிமா விரும்பிகளின் ஆஸ்தான பிளேயர்!
அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, நைஜீரியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பல்வேறு வயதுடைய 8,500க்கும் மேற்பட்ட பங்கேற்பார்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பாய்ன்டர் இன்ஸ்டிட்யூட்டில் மீடியாவைஸ் இயக்குனர் அலெக்ஸ் மகாதேவன் கூறுகையில், “சைலண்ட் ஜெனரேஷன் (68 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) தகவல்களைச் சரிபார்க்க சர்ச் இன்ஜினியைப் பயன்படுத்துவதை விட ஜெனரல் எக்ஸ் குழுவினர் இரண்டு மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் ஆன்லைன் உலகத்திற்குள் புதிதாக அடியெடுத்து வைக்கும் நபர்கள், ஆன்லைனில் தான் பார்த்த தகவல்களை சோசியல் மீடியாவில் பதிவாகும் கமெண்ட்களைக் கொண்டு சரிபார்ப்பதும் இரு மடங்கு அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தாங்கள் கேள்விப்பட்ட அல்லது படித்தது உண்மையா என்ற கேள்விக்கு, எல்லா தலைமுறைகளிலும் உள்ள பங்கேற்பாளர்கள் ஆதாரங்கள் அல்லது உண்மைகளால் ஆதரிக்கப்படுகிற விஷயத்தை மட்டுமே நம்புவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். Gen Z, Millennials மற்றும் Gen X ஆகியவை பூமர்கள் மற்றும் சைலண்ட் ஜெனரேஷனை விடத் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை அடையாளம் காண்பதில் சற்று அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகக் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
இணையத்தில் நீங்கள் பார்க்கும், படிக்கும் தகவலை எந்த அளவுக்கு நம்பலாம், மக்கள் தாங்கள் பார்த்த தகவல்களைப் பல ஆதாரங்களுடன் ஒப்பிட்டுச் சரி பார்ப்பது அல்லது கூகுள் சர்ச் மூலமாக ஆதாரங்களைத் தேடுவது போன்றவற்றின் மூலமாக உண்மையான தகவலைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதைக் கணக்கெடுப்பு சுட்டிக்கட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fake News, Social media