Home /News /technology /

5ஜி நெட்வொர்க்கால் ஒரு புதிய பிரச்சனை! தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு எச்சரிக்கை..

5ஜி நெட்வொர்க்கால் ஒரு புதிய பிரச்சனை! தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு எச்சரிக்கை..

5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

5G Technology | 2ஜி, 3ஜி, 4ஜி இதைத்தொடர்ந்து தற்போது 5ஜி அலைக்கற்றை வெளியீடு ஏலம் ஜூலை மாதம் நடைபெறும் என்று இந்திய அரசு அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து 5ஜி வெளியீட்டில் பல சிக்கல்கள் உருவாக தொடங்கியுள்ளது.

  மொபைல் டவர் நிறுவுதலுக்கு எதிராக தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் அதிக அளவு போலியான மொபைல் டவர்கள் நிறுவப்படுவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  இதை தொடர்ந்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வல்லுனர்கள் சங்கம் கூறுவது என்னவென்றால் சில நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் தனிநபர்களை அணுகி மக்கள் தனிப்பட்ட அல்லது நிறுவன கணக்குகளில் பணம் செலுத்தும் முறையை தவிர்க்க வேண்டும்.

  எந்த ஒரு இடத்திலும் டவர் நிறுவுவதற்கு முன்னால் நோ அப்ஜக்ஷன் சான்றிதழை [No Objection Certificate] பெற வேண்டும் என்பது கட்டாயம்.. ஆனால் இந்த மோசடி நபர்கள் டவர்கள் நிறுவுவதற்கு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் போலியான சான்றிதழை வழங்கியது தெரிய வந்துள்ளது.

  இந்த மொபைல் டவர்கள் தொலைத்தொடர்பு சேவை வல்லுனர்கள் அல்லது உள்கட்டமைப்பு வல்லுநர்கள் மூலம் மட்டுமே நிறுவப்படுகிறது. ஆதலால் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மக்களை எச்சரிக்கும் வகையில் சிந்து டவர், அமெரிக்கன் டவர்,கார்ப்பரேஷன் ,உச்சிமாநாடு டிஜிட்டல் உள்கட்டமைப்பு , அசெண்ட் டெலிகாம், தவர் விஷன் போன்ற மோசடிகள் குறித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

  Read More : வீனஸில் உயிர்கள் இல்லை - கேம்பிரிட்ஜ் ஆய்வு முடிவு!


  அதுமட்டுமல்லாமல் கட்டணமில்லா எண், இணையதளம் மற்றும் மின்னஞ்சல் போன்ற பல்வேறு வகையான சாதனங்கள் மூலம் பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாகவும் டி.ஆர்.துவா, என்ற மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

  மக்கள் டவர் நிறுவுதல் தொடர்பான சலுகைகளுக்கும் பிற தகவல்களுக்கும் டிஎஸ்பிக்கள் அல்லது ஐபிகளின் இணைய தளத்திற்குச் சென்று சரி பார்த்துக்கொண்டு பின் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் தடையில்லா தொலைத் தொடர்பை உறுதி செய்வதற்கும் , மாநிலங்கள் முழுவதும் தொலைத் தொடர்பை உருவாக்குவதற்கும் பலவகையான சேவைகளை ஆதகரிப்பதற்கு முக்கியமானதாக அமையும்.

  அலைபேசி டவர்களை நிறுவுவதற்கு குத்தகை எடுக்கப்படும் இடங்களுக்கு அரசு வரி வழங்கும்.Lt Gen Dr S.P. Kochhar, DG, COAI மொபைல் டவர்கள் தொடர்பான மோசடிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இப்படியான நிகழ்வுகள் டவரை உருவாக்க பணிபுரியும் ஊழியர்களுக்கு நம்பிக்கையின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது.

  தொலைத்தொடர்பு துறையானது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எனவே, தேவையான வலுவான டவர் உள்கட்டமைப்பை உருவாக்க DIPA உடன் இணைந்து செயல்படுவோம் என கோச்சார் கூறினார்.

  நாடு முழுவதும் 6.8 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் நாடு 5G க்கு தயாராகி வருவதால், 2024ம் ஆண்டுக்குள் 15 லட்சத்திற்கும் அதிகமான டவர்கள் நிறுவப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: 5G technology, Automobile

  அடுத்த செய்தி