2000 அடி உயரத்தில் இருந்து கீழேவிழுந்த ஐபோன்- தெளிவான வீடியோ பதிவுடன் மீட்பு! 

2000 அடி உயரத்தில் இருந்து கீழேவிழுந்த ஐபோன்- தெளிவான வீடியோ பதிவுடன் மீட்பு! 

ஐபோன்

பிரேசில் ஆவணப்பட தயாரிப்பாளரின் ஐபோன் எதிர்பாராதவிதமாக 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தபோது, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளது.

  • Share this:
    நாம் வைத்திருக்கும் செல்போன் சாதாரணமாக கீழே விழுந்தால்கூட நம்முடைய மனது படபடக்கும். ஆனால், 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஒருவரின் ஐபோன் செல்போன் கீழே விழுந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்துப்பாருங்கள். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆவணப்பட தயாரிப்பாளரான எர்னெஸ்டோ காலியோட்டோ(Ernesto Galiotto ) ரியோடி ஜெனிரோவில் உள்ள கடற்கரையோரத்தில் ஆவணப்படத்துக்கான படப்படிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விமானம் மூலம் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தனது ஐபோன் 6s மூலம் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்திருந்தார். 

    எதிர்பாரத விதமாக காற்று வேகமாக வீசியதால், அவரின் கையில் இருந்த ஐபோன் நழுவி கீழே விழுந்துள்ளது.  உடனடியாக, ஐபோனை தேடி கண்டுபிடித்த அவர்களுக்கு மிகப்பெரிய அதிசயம் காத்திருந்தது. 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த ஐபோன் எந்தவித சேதமும் அடையாமல் இருந்தது. மேலும், ஐபோன் மேல் போடப்பட்டிருந்த Scratch card மட்டும் சேதமடைந்திருந்தது. மற்றொரு வியப்பான விஷயம் என்னவென்றால், வீடியோ பதிவு செய்து கொண்டே ஐபோன் கீழே விழுந்துள்ளது. அந்த வீடியோவும் ஒரு இடத்தில் மட்டுமே காட்சிகள் தெளிவாக இல்லை. மற்ற இடங்களில் மிகவும் சூப்பராக காட்சிகளை பதிவு செய்துள்ளது.

    மேலும் படிக்க...எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேர் கைது...

    இது குறித்து அந்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் பேசிய எர்னெஸ்டோ காலியோட்டோ (Ernesto Galiotto ), ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். விமானத்தின் உதவியுடன் 2 ஆயிரம் அடி உயரத்தில் காட்சிகள் படமாக்கி கொண்டிருக்கும்போது, காற்று பலமாக வீசியதாக தெரிவித்த அவர், மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை தொடர்ந்ததாக தெரிவித்தார். ஐபோன் 6s - ஐ ஒரு கையில் பிடித்தவாறே காட்சிகளை பதிவு செய்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக கையில் இருந்த தொலைபேசி கீழே விழுந்ததாகவும் கூறியுள்ளார்.  

    Find My app மூலம் ஐபோனை தேடிக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ள அவர், அப்போது எந்த சேதமும் அடையாமல் வேலை செய்துகொண்டிருந்ததாகவும் கூறினார். ஐபோன் கீழே விழுந்தபோதும் கூட, அதனை தேடிக் கண்டுபிடித்துவிடலாம் என தான் தீர்க்கமாக நம்பியதாகவும் எர்னெஸ்டோ தெரிவித்துள்ளார். நிலத்தில் விழுந்திருந்தால் தாங்கள் மிக எளிமையாக கண்டுபிடித்திருபோம், ஆனால் தண்ணீருக்குள் விழுந்ததால் ஐபோனை தேடிக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஏர்னெஸ்டோ தெரிவித்தார்.

    மேலும் படிக்க...ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை

    விமானத்தில் இருந்து ஐபோன் விழுந்து எந்த சேதமும் அடையாமல் இருந்தது, இது முதன்முறையல்ல. ஏற்கெனவே, தெற்கு ஐஸ்லாந்தில் புகைப்படக் கலைஞர் ஒருவர் விமானத்தில் சென்று ஐபோன் 6s மூலம் புகைப்படம் எடுக்கும்போது தவறி கீழேவ விழுந்திருக்கிறது. அப்போதும், ஐபோனுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், புகைப்படக் கலைஞர் 13 மாதங்களுக்குப் பிறகு தான் தொலைத்த ஐபோனை கண்டுபிடித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: