• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • iPad வாங்க போறீங்களா? இதைப் படியுங்கள்!

iPad வாங்க போறீங்களா? இதைப் படியுங்கள்!

 ஐபாட்

ஐபாட்

எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் இந்த iPad Air 4-ன் விலை ரூ 54,900 முதல் ஆரம்பமாகிறது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபாட் ஏர்4 , தற்போது வரை மிகவும் விரும்பப்படும், அதிகமாக விற்பனையாகும் டேப்லெட்டாக இருந்து வருகிறது.

  • Share this:
அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தி வரும் பலருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக ஆப்பிளின் ஐபாட் வாங்குவது மிகவும் சுலபமாகி விட்டது. ஆரம்பநிலை முதல் அதிநவீன iPad வரை பல தரப்பினருக்கும் ஏற்றவாறு, பல்வேறு வரம்புகள் சந்தையில் உள்ளன. இந்தியாவில் iPad விரும்புபவர்களுக்கான விவரங்கள் இதோ.

9th ஜெனரேஷன் iPad (2021) :

இதன் விலை ரூ 30,900 முதல் ஆரம்பமாகிறது. நீங்கள் மலிவு விலையில் ஆப்பிள் டேப்லெட் வாங்க விரும்பினால், 9th ஜெனரேஷன் ஐபேட், உங்களுக்கான மிகச் சிறந்த டேப்லெட் ஆகும். இதன் சமீபத்திய மாடலில், 10.2-இன்ச் திரை, டச் ஐடியுடன் கூடிய ரெட்ரோ-பாணி டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 9th ஜெனரேஷன் iPad-ன் அடிப்படை மாடலில் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஐபோன் 11ஐ இயக்கம் செயலியான A13 பயோனிக் சிப்செட்டில் 9th ஜெனரேஷன் iPad இயங்குகிறது. விளக்கக்காட்சிகளை உருவாக்குவதற்கு, கேமிங், வீடியோ உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்ய நீங்கள் விரும்பினால், இந்த சாதனம் பொருத்தமாக இருக்கும். மேலும், இதன்12MP முன் கேமரா ஒரு புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. 9th ஜெனரேஷன் iPad OS-ல் ஐந்து ஆண்டுகள் வரை இலவசமாக அப்டேட் கிடைக்கும்.

iPad Air 4 :

எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் இந்த iPad Air 4-ன் விலை ரூ 54,900 முதல் ஆரம்பமாகிறது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபாட் ஏர்4 , தற்போது வரை மிகவும் விரும்பப்படும், அதிகமாக விற்பனையாகும் டேப்லெட்டாக இருந்து வருகிறது. iPad Pro போலவே தோற்றமளிக்கும் iPad Air 4 இல் 120 Hz ProMotion டிஸ்ப்ளே, மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார் ஆகியவை சிறப்பம்சங்களாகும். இந்த சென்சாரில் பவர் பட்டனில் பதிக்கப்பட்ட டச் ஐடி மற்றும் LiDAR ஸ்கேனர் உள்ளன. 10.9 இன்ச் திரையைக் கொண்ட இந்த டேப்லெட் பல்வேறு பணிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. நீங்கள் டைப் செய்யலாம், கேம்களை விளையாடலாம், OTT தளத்தை / வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம். அது மட்டுமின்றி, மாணவர்கள் இணைய வகுப்புகளுக்கும் பயன்படுத்தலாம், பணியில் இருப்பவர்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

iPad mini :

அழகான, கையடக்கமான iPad mini டேப்லெட் விலை ரூ 46,900 ஆகும். ஐபாட் மினி, மற்ற ஐபாட் டேப்லேட்டுகளில் இருந்து வேறுபாடும் ஒரு பிரத்யேக சாதனமாகும். மிகச்சிறந்த போர்ட்டபிள் டிவைசாக கருதப்படும் iPad mini, அழகான திரை, வேகமாக இயங்க உதவும் சிப், மிகச்சிறந்த ஸ்பீக்கர்கள், ஆப்பிள் பென்சிலை பயன்படுத்தகூடிய அம்சம், ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இது குறிப்புகளை எழுதிக்கொள்ளவும், மின்னணு புத்தகப் பிரியர்களுக்கும் மிகவும் ஏற்றது. புதிய iPad mini இல் 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் கொண்ட கேமரா 122 டிகிரி பார்வையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு பல அம்சங்கள் நிறைந்த, அதிக பெர்ஃபார்மான்ஸ் கொண்ட கையடக்கமான டேப்லெட் வாங்க வேண்டுமென்றால், iPad mini தான் சிறந்த தேர்வு.

Also read... பப்ஜி நியூ ஸ்டேட் முதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ வரை - இந்த வார முக்கிய டெக் நிகழ்வுகள்!

iPad Pro :

மிகச்சிறந்த டேப்லெட்டுகளில் ஒன்றான iPad Pro-ன் விலை ரூ. 71,900 முதல் ஆரம்பமாகிறது. ஆப்பிள் ஐபாட்களின், மற்றும் டேப்லெட்களின் மிகச்சிறந்த அனுபவத்தை உணர விரும்புபவர்களுக்கான தயாரிப்பு தான் இந்த iPad Pro, ப்ரீமியம் டேப்லெட். இந்த டேப்லெட் இரண்டு மடல்களில், இரண்டு வெவ்வேறு விலையில் கிடைக்கிறது. iPad Pro 11 இன்ச் மாடல் ரூ. 71,900 முதலும், iPad Pro 12.9 இன்ச் மாடல், ரூ. 99,900 முதலும் கிடைக்கின்றது. ஆப்பிள் சாதனங்களின் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. கூடுதலாக, 12.9 இன்ச் மாடலில், 16 இன்ச் மேக்புக் ப்ரோவில் இருப்பது போலவே ஒரு மினி எல்ஈடி டிஸ்ப்ளேவும் உள்ளது. இதில் இரண்டாவது ஜெனரேஷன் ஆப்பிள் பென்சிலும், மேஜிக் கீபோர்டு அக்சஸரியும்உள்ளன. ஆப்பிள் மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோவில் உள்ள M1 சிப் இந்த டேப்லெட்டிலும் உள்ளது. ஃபேஸ் ஐடி, 120-Hz திரை புதுப்பிப்பு வீதம், மேம்பட்ட ஒலிக்கான நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் Lidar சென்சார்கள் ஆகியவை இந்த ஐபாடில் மட்டுமே கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: