Home /News /technology /

ரோபோ முதல் ட்ரோன் வரை: அமேசானின் அட்டகாச தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகம்!

ரோபோ முதல் ட்ரோன் வரை: அமேசானின் அட்டகாச தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகம்!

மாதிரி படம்

மாதிரி படம்

அமேசானின் ‘ஹாலோ’ பிட்னெஸ் பயனாளர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது.இதில் மற்ற கருவிகளில் இருப்பது போல் அல்லாமல், பிட்னெஸ் ட்ராக்கர்களில் முக்கிய ‘அப்டேட்களுடன்’ வந்திருக்கிறது.

வீட்டு வேலை செய்யும் ரோபோ, பறக்கும் ட்ரோன் கேமரா, எலக்ட்ரானிக் டோர் பெல் வரை எண்ணற்ற ஸ்மார்ட் சாதனங்களை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி இங்கு காண்போம்.

ஆஸ்ட்ரோ என்ற ‘அதிசய’ ரோபோ :

நேற்று இரவு நடந்த அமேசான் நிகழ்ச்சியில் அனைவரையும் ஈர்த்த முக்கிய சாதனம் ஆஸ்ட்ரோ ஹோம் ரோபோ ஆகும். இதில் அலெக்சா இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோபோவின் கணினி பார்வை, செயற்கை நுண்ணறிவு, அலெக்ஸா மற்றும் ரிங் தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கி இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் வயதானவர்கள் அல்லது ஊனமுற்றவர்களுக்கு எளிதில் தொடர்புகொள்வதற்கு வசதியாக இந்த ரோபோ வடிவமைக்கபட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் இல்லாதபோது ஒரு வீட்டில் உள்ள அறைகள், செல்லப்பிராணிகளை கவனிக்க ஆஸ்ட்ரோவைப் பயன்படுத்தலாம். இந்த ரோபோ கண் வெளிப்பாடுகள், திரை இயக்கம் மற்றும் பேசும் திறன் போன்ற பழக்கவழக்கங்களுடன் வருகிறது.வீட்டைச் சுற்றிப் பார்க்க பெரிஸ்கோப் என்ற கேமராவை இது பயன்படுத்துகிறது. மற்ற ஸ்மார்ட் தயாரிப்புகளைப் போலவே, ஆஸ்ட்ரோவில் உள்ள மைக்ரோஃபோன் மற்றும் கேமராக்களையும் ஆப் செய்து வைக்க முடியும்.

ஸ்மார்ட் டிஸ்ப்ளே :

இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே எக்கோ ஷோ 15-ஆல் ஆனது. இது 15.6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதனை கடைகளில் உள்ள கவுண்ட்டர்களிலோ அல்லது வீட்டு சுவர்களிலோ பொருத்தலாம்.இது ‘அமேசான் ஏஇசட் 2 நியூரல் எட்ஜ்’ என்ற செயலியுடன் இயக்கப்பட வேண்டும். இந்த எக்கோ ஷோ 15யின் விலை டாலர் மதிப்பில் $ 249.99 என்றும், இந்திய மதிப்பில் தோராயமாக ரூ 18,500 இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அமேசான் க்ளோ - வீடியோ கால் :

இந்த கருவி குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 8 அங்குலம் டிஸ்ப்ளே, 14 அங்குல உயரமும் இது கொண்டுள்ளது.குழந்தைகள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ‘வீடியோ கால்’ செய்யும் சாதனமாக இதை உருவாக்கிருக்கிறார்கள்.

இதற்காக அமேசான் டிஸ்னி,சேஸீமே ஸ்ட்ரீட்,நிக்ளோடியோன் போன்ற குழந்தைகள் தொடர்பான நிறுவனங்களுடன் இணைந்து இச்சேவையை தருகிறது. இத்துடன் 1 வருடத்துக்கான அமேசான் கிட்ஸ் பிளஸ்,மே,மேட் கேஸ் மற்றும் டாங்கிரம் பிட்ஸ் போன்ற சேவைகளையும் பெறலாம் என்றும் அறிவித்துள்ளனர்.இதன் விலை டாலரில் $ 249.99 என்றும்,இந்திய மதிப்பில் ரூ 18,500 என்றும் கூறுகிறார்கள்.

அமேசான் ஹாலோ :

அமேசானின் ‘ஹாலோ’ பிட்னெஸ் பயனாளர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது.இதில் மற்ற கருவிகளில் இருப்பது போல் அல்லாமல், பிட்னெஸ் ட்ராக்கர்களில் முக்கிய ‘அப்டேட்களுடன்’ வந்திருக்கிறது. இது ஸ்டுடியோ வொர்க்அவுட் சேவையான ஹாலோ நியூட்ரிஷன், இது உணவுகள் மற்றும் எடை போன்றவற்றை கண்காணித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இது அமோல்ட் டிஸ்பிளேவுடன் வந்துள்ளது.இதன் ஒரு வருட மெம்பர்ஷிப் கட்டணம் சுமார் 5,900 ஆகும்.இது முற்றிலும் வண்ணமயமாகவும்,லேட்டஸ்ட் அப்டேட்களுடனும் வந்திருப்பதால் இக்கருவி “பிட்னெஸ்” பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கூறலாம்.

ஹோம் ட்ரோன் கேமிரா :

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அமேசான் அறிமுகப்படுத்திய ட்ரோன் கேமிரா அதகளப்படுத்தி இருக்கிறது. இந்த ட்ரோன் கேமரா வீடுகளுக்கென பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டுக்குள்ளோ அல்லது வெளியையோ ஏதாவது சத்தம் அல்லது செயல்படவைக்கும் பொது தானாகவே பறக்கிறது.

வீட்டை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்க இக்கருவி மிகவும் உபயோகமானதாக இருக்கும். கண்காட்சியில் ஆஸ்ட்ரோ ரோபோவுக்கு அடுத்து இதுதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 18,500 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசானின் முதல் தெர்மோஸ்டாட் :

இந்நிகழ்வில் அமேசான் தன்னுடைய முதல் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்டை அறிமுகப்படுத்தியது.இதில் ஹனிவெல்லின் ஹோம் தெர்மோஸ்டாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் மிகவும் எளிமையான வடிவமைப்பில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... இந்த ஸ்மார்ட்போன்களில் Youtube, Gmail இயங்காது - கூகுள் தடை பின்னணி என்ன?

வெப்பநிலையை எப்போது அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம் மற்றும் வீட்டில் வெப்பநிலை எவ்வாறு இருக்க வேண்டும் போன்றவற்றை கண்காணிக்கிறது. இது தற்போதுள்ள HVAC அமைப்புகளுடன் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் விலை தோராயமாக 4,400 ஆகும்.

பிலிங்க் வீடியோ டோர்பெல் :

இந்த பிலிங்க் வீடியோ டோர்பெல் ரிங் தவிர, அமேசான் பாதுகாப்பு தொடர்பான சேவைகளையும் கொண்டுள்ளது.இது கம்பி மற்றும் கம்பி இல்லாமல் இரண்டு வருடங்கள் இயங்கும் திறன் பேட்டரி கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளது.1080 எச்டி டிஸ்பிளே,சிம் அலெர்ட் போன்றவையும் உள்ளது.இதன் விலை டாலரில் $ 49.99 என்றும்,இந்திய மதிப்பில் 3,700 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Amazon, News On Instagram

அடுத்த செய்தி