சாம்சங் நிறுவனம் நேற்றுதான் புதிய சாம்சங் கேலக்ஸி S20 போனை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான திறன்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு விலை உயர்ந்ததாகத் தெரிந்தால் அதற்கு நிகரான ஒரு மலிவான ஆப்ஷன் ரெட்மி-யில் உங்களுக்காகவே உள்ளது.
நாளை ஜியோமி நிறுவனம் தனது Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. ஆன்லைன் மூலமாக நாளை புதிதாக Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. ஆனால், நாளை Mi 10 ப்ரோ உறுதியாக வெளியாகுமா என்று தெரியவில்லை.
நாளை வெளிவர உள்ள Mi 10 சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி S20-க்குப் பெரும் போட்டியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஹெச்டிஆர் 10+ டிஸ்ப்ளே உடன் பஞ்ச்-ஹோல் செல்ஃபி கேமிரா இதில் கவர்வதாய் உள்ளது. கசிந்த தகவல்களின் அடிப்படையில் Mi 10 போனில் 108 மெகாபிக்சல் கேமிரா உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் இயங்கும் எனத் தெரிகிறது. பேட்டரி திறன் 4,000mAh ஆகும். கூடுதலாக பின் பக்கத்தில் மூன்று ரியர் சென்சார்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இதுபோக தனியே ஒரு சென்சார் எல்இடி ஃப்ளாஷ் உடன் உள்ளது. க்ளாஸ் மற்றும் க்ளாசிக் தோற்றத்துடன் Mi 10 கவரும்.
மேலும் பார்க்க: ‘கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு...’- இந்திய வாசகர்களிடம் நன்கொடை கேட்கும் விக்கிபீடியா!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.