'48 ஆண்டுகளுக்கு ஐ-பேட் லாக்-ஐ எடுக்க முடியாது’ - தந்தைக்கு ஆப்பு வைத்த 3 வயது குழந்தை!

இவான் ஆஸ்நோஸ் என்ற அந்த பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு தீர்வு ஏதுவும் இருக்கிறதா? என உதவி கேட்டிருந்தார்.

'48 ஆண்டுகளுக்கு ஐ-பேட் லாக்-ஐ எடுக்க முடியாது’ - தந்தைக்கு ஆப்பு வைத்த 3 வயது குழந்தை!
ஆப்பிள் ஐ-பேட்
  • News18
  • Last Updated: April 10, 2019, 1:08 PM IST
  • Share this:
தந்தையின் ஐ-பேட் லாக்-ஐ எடுக்க முயற்சித்த 3 வயது குழந்தையின் செயலால், வருகிற 2067-ம் ஆண்டு வரையில் அந்த ஐ-பேட் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது 3-வயது குழந்தையின் செயலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நொந்துகொண்டுள்ளார். ஐ-பேட் லாக்-ஐ எடுக்க முயன்றுள்ளது குழந்தை. இதனால், ஐ-பேட் முடக்கப்பட்டதாகவும் 2,55,36,442 நிமிடங்களுக்குப் பின்னர் முயற்சிக்க நோட்டிஃபிகேஷன் வந்துள்ளது.

இவான் ஆஸ்நோஸ் என்ற அந்த பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு தீர்வு ஏதுவும் இருக்கிறதா? என உதவி கேட்டிருந்தார். ஆப்பிள் நிறுவன அறிவுரையின்படி ஐ-ட்யூன் மூலமாக ஐ-பேட் ரெஸ்டோர் செய்யப்பட்டால் தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பேக்-அப் இல்லையென்றால் ஐ-பேட் பதிவுகள் அழிந்துவிடும் என்ற எச்சரிகையும் வழங்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் ஐ-பேட் ரெக்கவர் ஆகி வருவதாகத் தற்போது இவான் நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

மேலும் பார்க்க: தொடங்கியது ரஜினியின் தர்பார்!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்