கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் டவுன்லோட் செய்தால் இவ்வளவு பிரச்னையா? கவனம் பாஸ்!

பிளே ஸ்டோரில் இருக்கும் 90 சதவிகித இலவச ஆஃப்கள் பயனர்களின் தகவல்களை கூகுளுக்கு அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: October 30, 2018, 4:39 PM IST
கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் டவுன்லோட் செய்தால் இவ்வளவு பிரச்னையா? கவனம் பாஸ்!
கோப்புப்படம்
Web Desk | news18
Updated: October 30, 2018, 4:39 PM IST
கூகுள் ப்ளேஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான இலவச ஆஃப்கள் கொட்டிக்கிடக்கின்றன. பயனர்களிடம் பெறும் தகவல்களை இந்த ஆப்கள் கூகுள், பேஸ்புக் போன்ற பெருநிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கூகுள் ப்ளேஸ்டோர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. பொதுவாகவே ஓர் ஆப்பை இன்ஸ்டால் செய்யும் போது, மொபைலில் இருக்கும் சில அம்சங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கேட்கப்படும். எடுத்துக்காட்டாக பியூட்டி பிளஸ் என்ற ஆஃப்பை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்தால், கேமரா, கேலரி, கான்டாக்ட் லிஸ்ட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி வேண்டும் என நோட்டிபிகேஷன் காட்டும். இதனை நாம் ஏற்றுகொண்டு ஓகே செய்தால் மட்டுமே ஆப் இன்ஸ்டால் ஆகும்.

ஆப்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுக்கப்படும் மேற்கண்ட விபரங்கள் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 சதவிகித இலவச ஆப்கள் பயன்படுத்துபவர்களின் தகவல்களை கூகுளுடனும், 43 சதவிகித ஆப்கள் பேஸ்புக் உடனும், குறிப்பிட்ட சதவிகிதத்திலான ஆப்கள் அமேசான், ட்விட்டர், வெரிஸான், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுடனும் பயன்படுத்துபவர்களிடம் இருந்து எடுக்கப்படும் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன.

கூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்த தகவல் பகிர்வு விவகாரம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில், “பிளேஸ்டோரில் உள்ள ஆப்கள் கிராஷ் அல்லது வேலைசெய்யாமல் போகும்போது, அனுப்பப்படும் ரிப்போர்ட், சேவைகளை அளிப்பதற்காக தகவல்களைப் பறிமாறிக் கொள்வது போன்ற வழக்கமான சேவைகள் தான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்..

தீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ!

இனி பாதுகாப்பான சேட்டிங் - புதிய அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப்!
Loading...
Also See..

First published: October 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...