ரூ. 5,000க்குள் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட் வாட்சுகள்!

smart watches

சியோமி, நாய்ஸ், ரியல்மி மற்றும் மற்ற நிறுவனங்களின், குறைந்தப்பட்சம் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் தரும் ஸ்மார்ட்வாட்ச்சுகள் பட்டியல் இங்கே.,

  • Share this:
இந்திய சந்தையில் சமீபத்தில் நாய்ஸ் (Noise) மலிவு விலையில் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியது. 5,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் இந்த வாட்சுகளில், ஒரு முறை சார்ஜ் செய்தாலே 9 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

சியோமி, நாய்ஸ், ரியல்மி மற்றும் மற்ற நிறுவனங்களின், குறைந்தப்பட்சம் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் தரும் ஸ்மார்ட்வாட்ச்சுகள் பட்டியல் இங்கே.,

நாய்ஸ் (Noise) கலர்ஃபிட் அல்ட்ரா (ரூ. 4,499) :

நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 9 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூலை 16 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இது 60 ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்கள் உடன் வருகிறது. IP68 மதிப்பீட்டுடன் வரும் இதன் வேரபிள்(wearable) வாட்டர்ப்ரூஃப் ஆகவும் இருக்கிறது. இது இதய துடிப்பு, தூக்கம் மற்றும் மன அழுத்த மானிட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Also Read:  சுயநினைவு திரும்பல; மூளை ஆபரேஷனுக்கு பிறகு அர்ச்சனாவின் நிலை என்ன? மகள் சாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

Boat Xtend போட் எக்ஸ்டெண்ட் ஸ்மார்ட்வாட்ச் ((ரூ .3,499):

இந்த நிறுவனம் வழங்கும் ஸ்மார்ட் வாட்சுகளில், உள்ளமைக்கப்பட்ட அலெக்சா ஆதரவுடன் வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் போட் எக்ஸ்டெண்ட் ஆகும். மலிவு வலையில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 300 mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச், இதய துடிப்பு சென்சார், SPO2 மற்றும் மன அழுத்த மானிட்டருடன் வருகிறது. மன அழுத்த அளவைக் குறிக்க ஸ்ட்ரெஸ் மானிட்டர் HRV (இதய துடிப்பு மாறுபாடுகள்) ஐப் அளவிடுகிறது. இந்த வேரபிள் 1.69 அங்குல தொடுதிரை கலர் டிஸ்ப்ளே மற்றும் 50 க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வாட்ச் ஃபேஸ்களைக் கொண்டுள்ளது.

ரெட்மி வாட்ச் (ரூ. 3999) :

ரெட்மி வாட்ச், உள்ளமைக்கப்பட்ட ஜி.பி.எஸ் உடன் வருகிறது மற்றும் மேம்பட்ட ஹெல்த் டிராக்கிங் அம்சங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. 230 mAh பேட்டரியில் இயங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை, ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் பேட்டரி பேக்கப் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read:  கேரளா செல்ல திட்டமா?: மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. கட்டுப்பாடுகள் என்னென்னனு தெரிஞ்சுக்கோங்க!

லைட்டிங் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளின் அடிப்படையில், தானாகவே அட்ஜஸ்ட் செய்யும் ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளது. இதன்மூலம், டிஸ்ப்ளே பிரகாசம் தானாகவே அட்ஜஸ்ட் ஆகி, உங்களுடைய காட்சி அனுபவத்தை மேம்படுத்தும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 200+ வாட்ச் முகங்கள் மற்றும் 3 மாற்றக்கூடிய வண்ண ஸ்டிராப்புகளையும் வழங்குகிறது, இதைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி சாதனத்தைத் கஸ்டமைஸ் செய்யலாம்.

(Noise) நாய்ஸ் கலர்ஃபிட் புரோ 3 (ரூ. 4,499):

நாய்ஸ் வழங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 10 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குவதாகக் கூறுகிறது, மேலும் இது 210 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதய துடிப்பு மற்றும் SpO2 மானிட்டருடன் வரும் இந்த சாதனம், 1.55 அங்குல (320 x 360 பிக்சல்கள்) எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. வாட்டர்ப்ரூஃப் ஸ்மார்ட்வாட்ச் 14 வெவ்வேறு விளையாட்டு பயன்முறைகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் Android மற்றும் iOS சாதனங்களுடன் இணக்கமானது. நாய்ஸ் கலர்ஃபிட் புரோ 3 தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் கிளவுட் அடிப்படையிலான வாட்ச் முகங்களை வழங்குகிறது. மேலும் ஸ்லீப் டிராக்கிங், பெண்கள் உடல்நலம் டிராக்கிங் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

(Fire-Boltt) ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் (ரூ. 2,999):

ஃபயர்-போல்ட் வழங்கும் இந்த Sub 3K ஸ்மார்ட்வாட்ச், ஒரு முறை சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் 8 நாட்கள் வரை நீடிக்கும் என்ற உறுதிமொழியோடு வருகின்றது. இதன் வேரபிள் (Wearable) 200க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்களை வழங்குகிறது. மேலும் இதில் 1.4 அங்குல முழு எச்டி டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இதய துடிப்பு மற்றும் SpO2 மானிட்டர் உள்ளது. இது பல்வேறு விளையாட்டு பயன்முறைகளையும் வழங்குகிறது, மேலும் உங்கள் தூக்க சுழற்சியைக் டிராக் செய்யவும் உதவுகிறது.

Also Read:  Rolls Royce: ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடி சிக்கினார்!

கிராஸ்பீட்ஸ் இக்னைட் (ரூ .3,299):

கிராஸ்பீட்ஸ் இக்னைட் ஸ்மார்ட்வாட்ச் டச்ஸ்க்ரீன் கலர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. மேலும் இது 10 நாட்கள் பேட்டரி ஆயுள் வரை வழங்குவதாக உறுதியளிக்கிறது. இதன் வேரபிள் IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, எனவே இது வாட்டர்ப்ரூஃப் சாதனமாகும். இந்த சாதனம் இதய துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் மற்றும் தூக்கத்தை அளவிடும் மானிட்டரைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் கிளவுட் அடிப்படையிலான வாட்ச் முகங்களையும் 6 வெவ்வேறு விளையாட்டு பயன்முறைகளையும் வழங்குகிறது.

ரியல்மி ஃபேஷன் வாட்ச் (ரூ. 3,499):

ரியல்மி ஃபேஷன் ஸ்மார்ட்வாட்ச் IP68 மதிப்பீட்டில், வாட்டர்ப்ரூஃப் வாட்ச்சாக வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 160 mAh பேட்டரியில் இயங்குகிறது மற்றும் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது 1.4 அங்குல (320 × 320 பிக்சல்கள்) வண்ண டச்ஸ்க்ரீன் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது மற்றும் இதய துடிப்பு மற்றும் SpO2 மானிட்டருடன் வருகிறது. ரியல்மி ஃபேஷன் வாட்ச் 14 விளையாட்டு பயன்முறைகளை வழங்குகிறது. மேலும் தூக்கம், கலோரிகள் எரிப்பு, ஸ்டெப்ஸ் கவுண்டிங் மற்றும் நடைபயிற்சி தொலைவு ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் மூலம் டிராக் செய்யலாம். ஸ்மார்ட்வாட்சைப் பயன்படுத்தி இசை மற்றும் கேமராவையும் கட்டுப்படுத்தலாம்.

NoiseFit Active (ரூ. 3,499):

NoiseFit ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் 24 x 7 இதய துடிப்பு கண்காணிப்பு, ஆக்ஸிஜன் (SpO2) மானிட்டர் மற்றும் மன அழுத்த மானிட்டருடன் வருகிறது. இந்த மாடல் 320 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தகவல் அளித்துள்ளனர். ஸ்மார்ட்வாட்சில் 1.28 இன்ச் (240 x 240 பிக்சல்கள்) கலர் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இது 14 விளையாட்டு பயன்முறைகளுடன் வருகிறது. மேலும் இது டஸ்ட்ப்ரூஃப் மற்றும் வாட்டர்ப்ரூஃப் அம்சம் கொண்டுள்ளது. இந்த வேரபிள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுடன் இணக்கமானது. இதிலே தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் கிளவுட் அடிப்படையிலான வாட்ச் முகங்களும் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Amazefit Neo ஸ்மார்ட்வாட்ச் (ரூ. 2,499):

இந்தப் பட்டியலில் இருக்கும் மிகவும் மலிவான ஸ்மார்ட்வாட்களில் அமேஸ்ஃபிட் நியோவும் ஒன்றாகும். இந்த வேரபிள் 160 mAh பேட்டரியில் இயங்குகிறது மற்றும் 28 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு ரெட்ரோ தோற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் 1.2 அங்குல கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த வட்டார்ப்ரூஃப் ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு மானிட்டருடன் வருகிறது மற்றும் 3 விளையாட்டு பயன்முறைகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் உங்கள் தூக்கத்தையும் டிராக் செய்ய முடியும். அமேஸ்ஃபிட் நியோ ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுடன் இணைக்கலாம்.
Published by:Arun
First published: