முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு!

டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு!

டிக் டாக்

டிக் டாக்

ஒரு பில்லியன் டிக் டாக் வாடிக்கையாளர்களில் 50 மில்லியன் பேர் இந்தியர்கள்.

  • Last Updated :

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இளைஞர்களை பாலியல் ரீதியாகத் தூண்டும் டிக் டாக் செயலியை ஏன் தடைசெய்யக் கூடாது என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதை 10 மில்லியன் மக்கள் தொகையில் எட்டு சதவீத இளைஞர்கள் டிக் டாக் தடையை வரவேற்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் 18 - 35 வயதிற்கு உட்பட்ட 30,000 நபர்களை ஈடுபடுத்தியுள்ளது. அவர்களிடம் டிக் டாக் தடை பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் 80 சதவீத இளைஞர்கள் டிக் டாக்கை தடை செய்யலாம் எனக் கூறியுள்ளனர். மீதம் 20 சதவீதம் பேர் டிக் டாக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த டிக் டாக் செயலி உலகம் முழுவதும் ஒரு பில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரியில் மட்டும் 43 சதவீதம் பேர் இந்த ஆப்பில் புதிய வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர். இதை கடந்த 2018 ஆண்டு ஜனவரி மாதம் ஒப்பிடுகையில் வெறும் 9.5 சதவீதம் மட்டுமே இணைந்துள்ளனர்.

இந்தத் தகவலை சென்சார் டவர் ஃபவுண்டரான ஆலிவர் யெ அவருடைய வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிக் டாக் டவுன்லோட் செய்ததில் 250 மில்லியனில் 25 சதவீதம் இந்தியர்கள்.

டிக் டாக் தடை குறித்து அதன் நிறுவனர் IANS ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில், “2011 ஆண்டு விதிமுறைகளின் படி உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைக்கு இணங்க ஆப்பை இயக்கி வருகிறோம்.

தற்போது நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முறை பரிசீலனைக்கு அனுமதித்தால் பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்துவிடுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

top videos

    மேலும், “ இந்தியாவைச் சேர்ந்த ஒரு தலைமை நோடல் அதிகாரியை நியமிக்கவுள்ளோம். அவர் சட்ட அமலாக்க முகவர்களின் ஆலோசனைப்படி சிறந்த ஒருங்கிணைப்பை கவனித்து இதுபோன்ற பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்வார்’’ எனக் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Tik Tok