ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Jio Chat : லேட் மெசேஜ், வாய்ஸ் அசிஸ்டன்ட் என Whatsapp-இல் இல்லாத புதிய அம்சங்களை வழங்கும் Jio Chat.. முழு விவரம் இதோ..

Jio Chat : லேட் மெசேஜ், வாய்ஸ் அசிஸ்டன்ட் என Whatsapp-இல் இல்லாத புதிய அம்சங்களை வழங்கும் Jio Chat.. முழு விவரம் இதோ..

ஜியோசாட்

ஜியோசாட்

இந்த செயலியில் ஒரு வீடியோ அழைப்பின் போது நீங்கள் 4 நபர்களையும், ஆடியோ அழைப்பில் 5 நபர்களையும் சேர்க்க முடியும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்தியாவில் தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜியோ எண்ணற்ற வசதிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரபலமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஜூம் (Zoom), கூகுள் மீட் (Google Meet) மற்றும் பலவற்றிற்கு போட்டியாக கடந்த ஆண்டு ஜியோமீட் (JioMeet) என்ற வீடியோ அழைப்பு ஆப்பை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மற்றொரு ஆப்பான ஜியோசாட்டை (JioChat) ஒரு புதிய பரிமாணத்தில் அறிமுகப்படுத்தியது. ஒரு உள்ளூர் மெசேஜிங் ஆப்பாக இது விளங்கி வருகிறது. ஜியோசாட் ஜியோவின் ஆரம்ப நாட்களிலிருந்தே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் புகழ் பெற்ற இந்த ஆப் தற்பொழுது வாட்ஸ்அப் போன்ற தோற்றத்துடன் புதிய ஸ்டைலில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

சமீப காலங்களில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஜியோசாட் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த மெசேஜிங் ஆப் முக்கியமாக வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.  மற்ற மெசேஜிங் ஆப் போலவே, செய்திகளை அனுப்பவும் பெறவும், எச்டி தரமான வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் எமோஜிகளை அனுப்பவும், 500 பேர் கொண்ட குழுவை உருவாக்கவும், பிராண்டுகளைப் பின்பற்றவும் யூசர்களை இது அனுமதிக்கிறது. இந்த செயலியை தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா போன்ற அனைத்து வகையான மொழிகளிலும் பயன்படுத்தலாம். கூடுதலாக, கூகுள் பிளே ஸ்டோர் (Android) மற்றும் ஆப் ஸ்டோர் (iOS) வழியாக இதனை எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

Jio Chat எவ்வாறு செயல்படுகிறது?

Jio Chat ஆப்-ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு உங்கள் எண்ணுடன் அதனை பதிவு செய்ய வேண்டும். உங்கள் எண்ணிற்கு ஒரு OTP கிடைக்கும். அதனுடன் உங்கள் பெயர் மற்றும் பாலினத்தை ஜியோசாட்டில் உள்ளீடு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து நீங்கள் பதிவுசெய்யப்பட்ட ஜியோசாட் யூசராக இருப்பீர்கள். இந்த ஆப் மொத்தம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஸ்டோரீஸ், சாட், கேமரா மூலம் கிளிக் செய்யப்படும் ஸ்டோரீஸ், சேனல்கள் மற்றும் கால்லிங் செக்சன் ஆகியவை ஆகும். நீங்கள் ஒரு புதிய சாட், புதிய குரூப் சாட் அல்லது கான்பரென்ஸ் கால் ஆகியவற்றை தொடங்க நினைத்தால் திரையின் கீழ் பகுதியில் தோன்றும் பிளஸ் ஐகான் கிளிக் செய்ய வேண்டும். அதேபோல திரையின் மேல் பிரிவில் சர்ச் ஐகான், காண்டாக்ட் செக்சன், பல்வேறு விருப்பங்களை அணுக மூன்று புள்ளிகளை கொண்ட மெனு ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

Jio Chat-ல் உள்ள அம்சங்கள்:

என்னதான் ஜியோசாட் வாட்ஸ்அப் செயலியை ஒத்ததாக இருந்தாலும் இதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது. அவை, பல்வேறு பிரபலமான நபர்களைப் பின்தொடர சேனல்கள் பிரிவு, சுயவிவரப் பிரிவில் பாலினம் மற்றும் மனநிலையைச் சேர்ப்பது மற்றும் சில சிறிய மாற்றங்கள் ஆகும். அவற்றை விவரமாக பின்பவருமாறு காணலாம்.

* ஸ்டோரீஸ் (Stories) பிரிவில் பிரபலமான தளங்களான பிங்க்வில்லா, இந்தி ரஷ் உட்பட பல தளங்களிலிருந்து செய்தி, உணவு, பொழுதுபோக்கு மற்றும் பலவற்றின் பல்வேறு வகைகளின் குறுகிய வீடியோக்கள் இடம்பெற்றிருக்கும். செய்தி ஆப்பிற்கு இந்த அம்சம் தேவையில்லை என்றாலும், சிலர் அதை விரும்பலாம். உங்கள் காண்டாக்ட் ஸ்டோரிகளையும் இந்த செயலி காண்பிக்கிறது.

* சமீபத்திய ட்ரெண்ட் செய்திகள் மற்றும் விளம்பர சலுகைகள், பிரபலமான பிராண்டுகள், நிறுவனங்கள் மற்றும் செய்தி வெளியீடுகளைப் பின்பற்றக்கூடிய பிரத்யேக ‘சேனல்கள்’ (Channels) பிரிவை ஜியோசாட் செயலி கொண்டு வந்துள்ளது. செய்தியை பொறுத்தவரை பிரபலமான சில சேனல்களான பிபிசி, இந்தியா டிவி, பாட்ரிகா, ஜாக்கி, அஜியோ லைஃப் மற்றும் பல உள்ளன. சாட் மூலம் நேரடியாக விரைவான நியூஸ் அப்டேட்டுகளை பெற விரும்பும் நபர்கள் இந்த அம்சத்தை விரும்புவார்கள்.

* ஜியோ கேர் (JioCare) - இது ஜியோ யூசர்களுக்காக வெளிப்படையாக உருவாக்கப்பட்டது. உங்கள் ஆப் கணக்கு தொடர்பான தகவல்கள், ஐ.யூ.சி கட்டணங்கள் மற்றும் சமீபத்திய ஜியோ கேஷ்பேக் மற்றும் ரீசார்ஜ் சலுகைகளைப் பார்க்க ஜியோகேர் சேனல் உங்களை அனுமதிக்கிறது.

* ஜியோசாட் அதன் சொந்த வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) அம்சத்தை சமீபத்தில் தான் வெளியிட்டது. எந்த ஒரு மெசேஜிங் செயலையும் இந்த அம்சத்தை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. உங்கள் குரலைப் பயன்படுத்தி காண்டாக்ட் பெயர்களைத் தேடுவதற்கான Google- ன் வாய்ஸ் சர்ச் அம்சத்தை இது ஒருங்கிணைக்கிறது. ஒருவரின் எண்ணை தொடர்பு பட்டியலில் தேடும் நேரத்தை வீணாக்க விரும்பாதவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

* ஜியோசாட் அமைப்புகளில் “செய்தி அனுப்புவதில் தாமதம்” (Delay Messages) எனப்படும் தனித்துவமான அம்சம் உள்ளது. இதைப் பயன்படுத்தி, உங்கள் செய்தியை 3 வினாடிகள் வரை தாமதப்படுத்தலாம். மேலும், நீங்கள் அனுப்பும் மெசேஜில் தவறு இருந்தால், அந்த குறிப்பிட்ட மெசேஜ் சென்ட் ஆவதற்குள் நீங்கள் நீக்கிவிடலாம்.

* குரூப் லிமிட் (Group Limit) மூலம் ஒரே நேரத்தில் 500 பேருடன் உரையாடலுக்கான குழுக்களை உருவாக்க ஜியோசாட் உங்களை அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் மூலம் ஒரு குழுவில் உங்களால் 256 பேரை மட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* வாய்ஸ் & வீடியோ கால் (Voice, Video call) -  இந்த செயலியில் ஒரு வீடியோ அழைப்பின் போது நீங்கள் 4 நபர்களையும், ஆடியோ அழைப்பில் 5 நபர்களையும் சேர்க்க முடியும்.

First published:

Tags: Alternative, Android, Features, IOS, JioChat, Messaging app, WhatsApp